பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய திறனாய்வு தேர்வு; மாணவர்களுக்கு அழைப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.மத்திய அரசு சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக மாநில அளவில் பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் தேசிய அளவிலான தேர்வு எழுத

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக மாநில அளவில் பள்ளி கல்வித்துறை சார்பில் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுவோர் தேசிய அளவிலான தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தற்போது இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்கள் 2022, ஜன.23 ம் தேதி நடக்க உள்ள தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.www.dge.tn.gov.in ல் விண்ணப்பத்தை பதிவிறக்கி, தேர்வு கட்டணம் ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் நவ.13 க்குள் ஒப்படைக்கலாம்.

தேர்வர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பத்துடன் சாதிச் சான்று சமர்ப்பிக்க வேண்டும். தலைமையாசிரியர்களால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் போது சாதிச் சான்றிதழை கொடுத்தால் ஏற்றுக் கொள்ளப்படாது என, முதன்மை கல்வி அலுவலர் கருப்புச்சாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X