தமிழ்நாடு

சுகாதாரம் பேணாத காலியிடமா அப்போ அது உங்களுக்கில்லை; மாநகராட்சி நடவடிக்கை

Added : நவ 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'மக்களே உங்களுக்கு சொந்தமான காலி இடத்தை சுகாதாரமாக வைக்கவில்லை எனில் அந்த இடம் பொது உபயோகத்திற்காக தேர்வு செய்யப்படும்' என, திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.தற்போது மழைக்காலம் என்பதால் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. இதை தடுக்க, களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தி வருகின்றனர். தேவையற்ற
 சுகாதாரம் பேணாத காலியிடமா அப்போ அது உங்களுக்கில்லை; மாநகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல் : 'மக்களே உங்களுக்கு சொந்தமான காலி இடத்தை சுகாதாரமாக வைக்கவில்லை எனில் அந்த இடம் பொது உபயோகத்திற்காக தேர்வு செய்யப்படும்' என, திண்டுக்கல் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. இதை தடுக்க, களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தி வருகின்றனர். தேவையற்ற பொருட்களில் கொசுப்புழு இருப்பின் அழிக்க நடவடிக்கை எடுக்கின்றனர். மாநகராட்சி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடங்களில் சிலர் குப்பை கொட்டுவதாலும், அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் நிலத்தை சுகாதாரமாக பராமரிக்காததாலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் உள்ளது.

அதுபோன்ற இடங்களை கண்டறிந்து, அதற்கு சொந்தமானவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் அடையாளம் காணப்படுகிறது. நிலத்திற்குரியவர் தெரியவில்லை எனில் அந்த இடத்தில் 'இது பொது உபயோகத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடமாகும்' என, மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. அதன்பின் இட உரிமையாளர் வந்தால் அவரிடம் இடத்தை சுகாதாரமாக பராமரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X