பருவமழையை எதிர்கொள்ள கொடைக்கானல் தயார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழையை எதிர்கொள்ள கொடைக்கானல் தயார்

Added : நவ 10, 2021
Share
கொடைக்கானல் : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கொடைக்கானல் தயார் நிலையில் உள்ளதாக ஆர்.டி.ஓ., முருகேசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய கொடைக்கானல் டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த் துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத் துறை, மின்வாரியம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.கனமழை

கொடைக்கானல் : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கொடைக்கானல் தயார் நிலையில் உள்ளதாக ஆர்.டி.ஓ., முருகேசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய கொடைக்கானல் டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய்த் துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத் துறை, மின்வாரியம் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.கனமழை நேரத்தில் மண்சரிவு, மரங்கள் விழுவதை உடனடியாக அகற்ற கீழ்மலை, மேல்மலையில் இரு குழுக்கள் செயல்படுகிறது.

பேரிடர் காலங்களில் மீட்பு பயிற்சி பெற்ற 6 போலீசார், அவர்களுடன் 20 போலீசாரும் சேர்ந்து செயல்படுவர்.அனைத்து துறை அதிகாரிகளையும் ஒன்றிணைக்கும் வாட்ஸ்அப் குழு உள்ளது. இதன் மூலம் அதிகாரிகள் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிவிப்பர். தங்களது பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X