கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார்.. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை| Dinamalar

இந்தியா

கனமழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயார்.. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை

Added : நவ 10, 2021
Share
புதுச்சேரி : வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு அதிக கனமழைக்கான'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, மீட்பு பணிக்கான முன்னேற்பாடுகளை அரசு முடுக்கிவிட்டு தயார் நிலையில் உள்ளது.புதுச்சேரியில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு துவக்கத்தில் இருந்து திடீர் திடீரென கனமழை பெய்து

புதுச்சேரி : வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு அதிக கனமழைக்கான'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

அதனையொட்டி, மீட்பு பணிக்கான முன்னேற்பாடுகளை அரசு முடுக்கிவிட்டு தயார் நிலையில் உள்ளது.புதுச்சேரியில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு துவக்கத்தில் இருந்து திடீர் திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால், கடந்த மாதமே, ஆண்டின் சராசரி மழை அளவை எட்டியது.மக்கள் அவதிஇந்நிலையில், கடந்த 26ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கி, 30ம் தேதி ஒரே நாளில் 12.6 செ.மீ., மழை கொட்டியது.

கடந்த 7 ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதில், நேற்று முன்தினம் அதிகபட்சமாக காரைக்காலில் 15 செ.மீ., பத்துக்கண்ணுவில் 8.9 செ.மீ., மழை பெய்துள்ளது.தொடர் மழையால், பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை சற்று விட்டதை தொடர்ந்து பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிந்ததால் மக்களும், அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.எச்சரிக்கைஇந்நிலையில், நேற்று வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையும் புதுச்சேரியில் அதி தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

ஏற்கனவே, புதுச்சேரி, காரைக்காலில் மழை நீர் நிரம்பி வழியும் நிலையில், இன்று மீண்டும் கனமழை பெய்தால் புதுச்சேரி வெள்ளக்காடாகும் ஆபத்து உள்ளது.அரசு நிர்வாகம் உஷார்அதனையொட்டி, புதுச்சேரி அரசு நிர்வாகம் சார்பில் பேரிடர் மேலாண்மை துறை மீட்பு பணிக்கான முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி வருவாய் துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, மின்துறை, போலீஸ், வனத்துறை, தீயணைப்பு துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.முன்னேற்பாடுமழை நீர் சூழும் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட ஏதுவாக பள்ளிகள் மற்றும் சமுதாய நலக் கூடங்கள் என மொத்தம் 200 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், மழை நீர் சூழும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மழை நீர் தேங்கும் பகுதிகளில் உள்ள வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் ஏற்கனவே துார் வாரி சீரமைத்துள்ளனர். இருப்பினும், நேற்று மீண்டும் ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா என ஆய்வு செய்து, தடையின்றி மழை நீர் ஓட வழி ஏற்படுத்தினர்

மீன்வளத்துறை சார்பில், கடல் சீற்றமாக இருப்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பேரிடர் மீட்பு படை வருகைமீட்பு பணிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் புதுச்சேரிக்கும், 20 பேர் கொண்ட குழுவினர் காரைக்காலுக்கும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 8:00 மணி அளவில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் கலெக்டரின் மேற்பார்வையில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.பள்ளி, கல்லுாரிகளுக்குஇன்றும், நாளையும் விடுமுறைதொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இன்று 10ம் தேதியும், நாளை 11ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X