தனித்தேர்வராக தொழில் தேர்வு எழுத விருப்பமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனித்தேர்வராக தொழில் தேர்வு எழுத விருப்பமா

Added : நவ 10, 2021
Share
திண்டுக்கல் : அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் பங்கேற்க ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற செக்டாருடன் தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் பெற்றவர்கள், 2018 ஆகஸ்ட் வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழும

திண்டுக்கல் : அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதில் பங்கேற்க ஐ.டி.ஐ.,யில் தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற செக்டாருடன் தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் பெற்றவர்கள், 2018 ஆகஸ்ட் வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழும தொழிற்பிரிவு பயிற்சியாளர்களும் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.வயது 21 பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளோர் தேர்வு தொடர்பான தகவல்களை www.skilltraining.tn.gov.in ல் பார்க்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.200 செலுத்திய ரசீது, கல்வி சான்றிதழ் நகலுடன் நவ.22 க்குள் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0451-2970049 ல் பேசலாம் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X