கம்பம் : தொடரும் கனழையால் கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை பழங்கள் வீணாகி வருகிறது. கொள்முதலுக்கு வியாபாரிகள் வராததால் பழங்களை பறித்து கீழே கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆண்டுதோறும் திராட்சை சாகுபடியாகிறது. காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, சுருளி அருவி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி மற்றும் ஓடைப்பட்டி பகுதிகளில் திராட்சை அதிகளவில் சாகுபடியாகிறது. கோடைகாலங்களில் நல்ல விலை கிடைக்கும். மழை, பனி காலங்களில் விலை கிடைக்காது.
இருந்தும் கடந்த மாதம் வரை ஓரளவிற்கு நல்ல விலை கிடைத்தது. சில வாரங்களாக மழை தொடர்வதால் பழங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொள்முதலுக்கு வியாபாரிகள் வரவில்லை. இதனால் பழங்கள் கொடிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.வேறுவழியின்றி விவசாயிகள் பழங்களை பறித்து கீழே கொட்டுகின்றனர்.
காமயகவுண்டன்பட்டி திராட்சை சாகுபடியாளர்கள் சங்க நிர்வாகி இருளாண்டி, ''15 நாட்களுக்கு முன் கிலோ ரூ. 25 வரை கிடைத்தது. இரு வாரமாக திராட்சையை வாங்க வியாபாரிகள் வரவில்லை. கொடிகளில் பழங்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் யார் வேண்டுமானானலும் வெட்டி எடுத்து செல்ல கூறினாலும் முன்வரவில்லை. வேறுவழியில்லாமல் கீழே கொட்டுகிறோம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE