இந்தியா

மழைநீரில் மூழ்கிய பயிர்களை வேளாண் அமைச்சர் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
பாகூர் : ஏம்பலம் தொகுதியில் மழையால் பாதித்த நெல் பயிர்களை, வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுச்சேரி முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. பாகூர் பகுதியில் வாய்க்கால்கள் துார் வாரப்படாமல் விடப்பட்டதால், மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு, நெல் நடவுகளை மழை நீர் மூழ்கடித்தது.இதனால், பயிர்கள் அழுகும் நிலை

பாகூர் : ஏம்பலம் தொகுதியில் மழையால் பாதித்த நெல் பயிர்களை, வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுச்சேரி முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. பாகூர் பகுதியில் வாய்க்கால்கள் துார் வாரப்படாமல் விடப்பட்டதால், மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு, நெல் நடவுகளை மழை நீர் மூழ்கடித்தது.இதனால், பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம், அரங்கனுார், சேலியமேடு குடியிருப்புபாளையம், பின்னாச்சிக்குப்பம், செம்பியபாளையம், புதுகுப்பம், ஏம்பலம், கோர்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை, வேளாண் துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார், லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர்.கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன், துணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X