பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் பக்தர்களின்றி நடந்த சூரசம்ஹாரம்; கந்தசஷ்டி விழாவில் இன்று திருக்கல்யாணம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
பழநி : பழநி கந்தசஷ்டி விழாவில் நேற்று பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடந்தது. இன்று காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நவ.4ல் காப்பு கட்டுதலுடன் துவங்கிய கந்தசஷ்டி விழா நவ.10 வரை நடக்கிறது. நேற்று பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல் 2:45 மணிக்கு மேல் மலைகோயிலில் வேல் வாங்குதல் நடந்தது.
 பழநியில் பக்தர்களின்றி நடந்த சூரசம்ஹாரம்; கந்தசஷ்டி விழாவில் இன்று திருக்கல்யாணம்

பழநி : பழநி கந்தசஷ்டி விழாவில் நேற்று பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடந்தது. இன்று காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் நவ.4ல் காப்பு கட்டுதலுடன் துவங்கிய கந்தசஷ்டி விழா நவ.10 வரை நடக்கிறது. நேற்று பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, பகல் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை, பகல் 2:45 மணிக்கு மேல் மலைகோயிலில் வேல் வாங்குதல் நடந்தது. அதன்பின் சன்னதி திருகாப்பிடப்பட்டு, மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி புறப்பட்டு கிரிவீதி வந்தடைந்தார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி மங்கம்மாள் மண்டபம் வந்தடைந்தார்.


பக்தர்களின்றி சூரசம்ஹாரம்:


நேற்று காலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து நான்கு சூரன்களும் கிரிவீதி கொண்டுவரப்பட்டனர். கந்தசஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தண்டு விரதம் முடித்து முருகனை வழிபட்டனர். மாலை 5:45 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளிலும், வடக்கே தாரகாசுரன், கிழக்கே பானுகோபன், தெற்கே சிங்கமுகாசுரன், வடக்கே சூரபத்மன் முத்துக்குமாரசுவாமியால் வதம் செய்யப்பட்டனர். இரவு 9:00 க்கு மேல் கோயில் சார்பாக வெற்றி விழா நடந்தது. மலைக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு ராக்கால பூஜை நடந்தது.

சூரசம்ஹார நிகழ்வுக்கு கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தது. மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் எஸ்.பி., ஸ்ரீனிவாசன், கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி கமிஷனர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். ஏ.டி.எஸ்.பி., லாவண்யா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இன்று திருக்கல்யாணம்:


இன்று (நவ.,10) காலை 9:00 க்கு மேல் 10:30 மணிவரை மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பகல் 12:30 மணிக்குப்பின் வழக்கம்போல் மலைக்கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 6:30 க்கு மேல் 7:30 மணிக்குள் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.


திண்டுக்கல்லில் சூரசம்ஹாரம்:


கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல்லில் மூன்று கோயில்களில் சூரசம்ஹாரம் நடந்தது.திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன், மேட்டுராஜக்காபட்டி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில் வேலுடன் மயில் வாகனத்தில் கிளம்பிய முருகன் சூரனை வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் பால், பழச்சாறு அருந்தி விரதம் நிறைவு செய்தனர். இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X