தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை பறிகொடுத்த தி.மு.க., அரசு: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

Added : நவ 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை தி.மு.க., அரசு விட்டுக் கொடுத்துள்ளதாக' திண்டுக்கல், நிலக்கோட்டையில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.திண்டுக்கல் ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அவர் பேசியது:முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை எட்டும் முன்பாக தண்ணீர் திறக்க கேரள அரசுக்கு தி.மு.க.,
 முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை பறிகொடுத்த தி.மு.க., அரசு:  அ.தி.மு.க., குற்றச்சாட்டு

திண்டுக்கல் : 'முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை தி.மு.க., அரசு விட்டுக் கொடுத்துள்ளதாக' திண்டுக்கல், நிலக்கோட்டையில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

திண்டுக்கல் ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். அவர் பேசியது:முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடியை எட்டும் முன்பாக தண்ணீர் திறக்க கேரள அரசுக்கு தி.மு.க., அரசு அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க.,விற்கு கம்யூ., கட்சியின் தயவு தேவை என்பதால் கேரள அரசிற்கு ஆதரவாக செயல்படுகிறது. முல்லை பெரியாறு உரிமையை மீட்கும் வரை போராடுவோம், என்றார்.

அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன், பாரதிமுருகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன் பங்கேற்றனர்.

நிலக்கோட்டையில் ஆர்பாட்டம்: நிலக்கோட்டையில் கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அவர் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடி பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி உயர்த்த வழிவகுத்தார். அந்த உரிமையை இன்று கேரள அரசிடம் தி.மு.க., அரசு விட்டுக் கொடுத்துள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றால் தமிழர்களின் உரிமை பறிபோய்விடும்.

காவிரி, பெரியாறு பிரச்னைகளில் கேரள, கர்நாடக அரசை தட்டிக்கேட்க திராணியின்றி தி.மு.க., அரசு உள்ளது. ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது, என்றார்.

தேன்மொழி எம்.எல்.ஏ., மாநில ஜெ., பேரவை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட அவைத் தலைவர் குப்புசாமி, துணைச் செயலாளர்கள் சந்திரா, விஜயபாலமுருகன், பொருளாளர் வேணுகோபாலு, ஒன்றியச் செயலாளர்கள் யாகப்பன், மோகன், நல்லதம்பி, பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், சார்பு அணி செயலாளர்கள் யூசுப் அன்சாரி, அன்பாதீன், முத்தையா, நகர செயலாளர்கள் தண்டபாணி, சேகர், முன்னாள் எம்.பி., உதயகுமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X