பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்காலத்தில் தோட்டக்கலை பயிர் சேதத்தை தவிர்ப்பது எப்படி

Added : நவ 10, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'மழைக்காலத்தில் தோட்டக்கலை பயிர் சேதத்தை தவிர்ப்பது குறித்து' திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி ஆலோசனை வழங்கினார்.அவர் தெரிவித்தது: நிலத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து வாழை போன்ற மரங்கள்

திண்டுக்கல் : 'மழைக்காலத்தில் தோட்டக்கலை பயிர் சேதத்தை தவிர்ப்பது குறித்து' திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள்சாமி ஆலோசனை வழங்கினார்.

அவர் தெரிவித்தது: நிலத்தில் மழைநீர் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து வாழை போன்ற மரங்கள் சாயாதபடி பாதுகாக்கலாம். தக்காளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி பயிர்களின் அடிப்பகுதியில் மண் அணைத்தல் வேண்டும்.பந்தல் காய்கறிகள், மலர்ச் செடிகளில் காய்ந்து போன இலைகளை அகற்றி நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கலாம். மா, கொய்யாவில் கிளைகளை கவாத்து செய்யலாம்.

கண்வலி கிழங்கு சாகுபடி நிலங்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி அமைப்பதோடு பந்தல் இழுவை கம்பிகள் உறுதியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.இதன் மூலம் கிழங்கு அழுகல், பயிர் சாய்ந்து சேதம் ஏற்படுவதை தடுக்கலாம். பசுமை, வலைக் குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டு உள்ளதையும், உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததையும் உறுதி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X