தமிழ்நாடு

இருளர் குடியிருப்பில் மழைநீர் நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : நவ 10, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திண்டிவனத்தில் சில தினங்களாக பெய்து வரும் கன மழையால், 30வது வார்டு சஞ்சீவிராயன்பேட்டை பகுதியிலுள்ள இருளர் குடியிருப்பு, வள்ளலார் தெரு, குமரன் தெரு, தென்னைமரச்சாலை, ஏரிக்கோடி தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர்

திண்டிவனம் : திண்டிவனத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இருளர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் சில தினங்களாக பெய்து வரும் கன மழையால், 30வது வார்டு சஞ்சீவிராயன்பேட்டை பகுதியிலுள்ள இருளர் குடியிருப்பு, வள்ளலார் தெரு, குமரன் தெரு, தென்னைமரச்சாலை, ஏரிக்கோடி தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.குறிப்பாக இருளர் குடியிருப்பு பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் செய்து தரவில்லை. மேலும், இருளர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என இருளர் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X