சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் உட்பட மூவர் கைது

Added : நவ 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : மரக்காணம் அருகே நிலத்தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.மரக்காணம் அடுத்த கிளாப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து, 35; இவரது அண்ணன் சீனுவாசன், 42; இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. நேற்றிரவு 8:00 மணிக்கு ஏற்பட்ட தகராறில், சீனுவாசன், அவரது மனைவி வாசுகி, 35; மற்றும் மைத்துனர் சதாசிவம், 56;

விழுப்புரம் : மரக்காணம் அருகே நிலத்தகராறில் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த கிளாப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து, 35; இவரது அண்ணன் சீனுவாசன், 42; இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது. நேற்றிரவு 8:00 மணிக்கு ஏற்பட்ட தகராறில், சீனுவாசன், அவரது மனைவி வாசுகி, 35; மற்றும் மைத்துனர் சதாசிவம், 56; ஆகியோர் சிவக்கொழுந்து தலையில் மரக்கட்டையால் தாக்கினர்.

அவரை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர், இறந்துவிட்டதாக கூறினர்.சீனுவாசன் உள்ளிட்ட மூன்று பேரையும் மரக்காணம் போலீசார் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சிவக்கொழுந்துவிற்கு கங்கம்மாள் என்ற மனைவி, ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X