பொது செய்தி

தமிழ்நாடு

வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் கருத்து கேட்புக் கூட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி நகராட்சி, வடக்கனந்தல், சின்னசேலம், சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம் பேரூராட்சிகள் என மாவட்டம் முழுதும் 136 ஓட்டுச்சாவடி மையங்கள்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி நகராட்சி, வடக்கனந்தல், சின்னசேலம், சங்கராபுரம், மணலுார்பேட்டை, தியாகதுருகம் பேரூராட்சிகள் என மாவட்டம் முழுதும் 136 ஓட்டுச்சாவடி மையங்கள் தயார் செய்யப்பட்டு, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரமுகர்கள், தேர்தல் இடஒதுக்கீடு விபரத்தை பத்திரிகைகளில் அறிவிப்பு செய்ய வேண்டும். சங்கராபுரம் மற்றும் மணலுார்பேட்டை பேரூராட்சியில் கூடுதல் ஓட்டுச்சாவடி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் குமாரி (வளர்ச்சி), முரளி (தேர்தல்), நகராட்சி கமிஷனர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X