தமிழ்நாடு

சின்னசேலம் ஏரிகளில் கலெக்டர் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கச்சிராயபாளையம் கோமுகி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சின்னசேலம் தாலுகாவில் உள்ள 115 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடத்துார் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவுள்ள தெங்கியாநத்தம் ஏரிகள் முழு கொள்ளளவை
 சின்னசேலம் ஏரிகளில் கலெக்டர் ஆய்வு

சின்னசேலம் : சின்னசேலம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கச்சிராயபாளையம் கோமுகி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், சின்னசேலம் தாலுகாவில் உள்ள 115 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடத்துார் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவுள்ள தெங்கியாநத்தம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்த ஏரிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஏரி கரைகளின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.ஆய்வின்போது, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் அன்பு மணிமாறன், பொதுப்பணி துறை அலுவலர் பிரபு, பி.டி.ஓ., துரைசாமி, தாசில்தார் அனந்தசயனன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X