பாலாற்று நீரை 324 ஏரிகளில் நிரப்பும் பொதுப்பணித்துறைக்கு சபாஷ்: ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்று நீரை 324 ஏரிகளில் நிரப்பும் பொதுப்பணித்துறைக்கு சபாஷ்: ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பு

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (19)
Share
பாலாற்றிலிருந்து, வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலந்து வருவதால், நான்கு வகையான கால்வாய்கள் மூலம், பாலாற்று வெள்ள நீரை மடை மாற்றி, 324 ஏரிகளுக்கு பொதுப்பணித் துறையினர் நிரப்பி வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே, காஞ்சிபுரம் மாவட்ட
பாலாற்று நீர், ஏரிகள், பொதுப்பணித்துறை, சபாஷ்,  தண்ணீர், கடல், கலப்பு,

பாலாற்றிலிருந்து, வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலந்து வருவதால், நான்கு வகையான கால்வாய்கள் மூலம், பாலாற்று வெள்ள நீரை மடை மாற்றி, 324 ஏரிகளுக்கு பொதுப்பணித் துறையினர் நிரப்பி வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே, காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பாலாற்றில், 20 நாட்களுக்கு முன்பாக, வினாடிக்கு 2,000 கன அடி நீர் சென்றது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வினாடிக்கு எவ்வளவு நீர் செல்கிறது என, பொதுப்பணித் துறை நாள்தோறும் கணக்கிட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகில், வாயலுாரில் கடலில் கலக்கும் வெள்ள நீர் அளவை பொதுப்பணித் துறையினர் கணக்கிட்டதில், வினாடிக்கு, 20,000 கன அடிநீர் கடலுக்கு செல்கிறது. ஒரு நாளைக்கு கணக்கிட்டால், 1.7 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வருகிறது.பாலாற்று நீரை பெரும்பாலும் கடலில் கலக்க விடாமல் சேமிக்க, ஏழு தடுப்பணைகள் தேவைப்படுவதாக பொதுப்பணித் துறை தெரிவிக்கிறது. ஆனால், தற்போது மூன்று தடுப்பணைகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர்.


290 ஏரிகள் நிரம்பினபாலாற்றில் தண்ணீர் வந்தவுடன், வீணாக கடலில் கலக்காமல், அருகில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணியை, பொதுப்பணித் துறையினர் முதலில் மேற்கொள்வர். அதன்படி, இம்முறையும் கால்வாய்கள் மூலமாக, ஏராளமான ஏரிகளை நிரப்பி உள்ளனர்.குறிப்பாக, காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து, பாலாற்றின் இருபுறமும் பிரியும், மகேந்திரவாடி, காவேரிப்பாக்கம், சக்கரமல்லுார், துாசி ஆகிய நான்கு கால்வாய் மூலம், 324 ஏரிகளை நிரப்புகின்றனர். இந்த 324 ஏரிகளும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. தற்போது வரை, 290 ஏரிகள் முழுதுமாக நிரம்பிஉள்ளன.பாலாற்று நீரை, ஏரிகளுக்கு மடைமாற்றி திருப்பும் நீர் மேலாண்மை, பல்லவர் காலத்திலேயே இருந்துள்ளது.

கி.பி.ஏழாம் நுாற்றாண்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, கம்பவர்ம பல்லவன் வெட்டியதாக கூறப்படும் கம்ப கால்வாய், இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. கம்ப கால்வாய் மூலம், 70க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்ப முடிகிறது. 324 ஏரிகளை நிரப்ப தேவைப்படும். இந்த நான்கு கால்வாய் மூலம், 80 ஆயிரத்து, 467 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.பாலாறு மூலம், இந்தாண்டு ஏராளமான நீர்நிலைகள் முழுதுமாக நிரம்பியுள்ளன.


போக்குவரத்து துண்டிப்பு
latest tamil news
நேற்றைய கணக்கெடுப்பின்படி, பாலாற்றில் 20 ஆயிரம் கன அடி நீர் செல்வதால், காஞ்சிபுரம் அருகில் உள்ள செவிலிமேடு தரைப்பாலத்தை மூழ்கடித்து, வெள்ள நீர் செல்கிறது. இதேபோல், காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில், பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலத்தை தாண்டி வெள்ள நீர் செல்கிறது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து பெரும்பாக்கம் வழியாக வடஇலுப்பை, பிரம்மதேசம் மற்றும் ஆற்காடு செல்லும் பஸ் போக்குவரத்து இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


30 கி.மீ., சுற்றி செல்லணும்பெரும்பாக்கம் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் போக்கு வரத்துதுண்டிக்கப்பட்டது. இதனால் சித்தனகால், வடஇலுப்பை, புதுார், பிரமதேசம், சக்கரநல்லுார், வல்லனுார், புதுப்பாடி, போன்ற பகுதி மக்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு காஞ்சிபுரம் அருகில் இருப்பதால் பெரும்பாக்கம் வழியாக காஞ்சிபுரம் செல்வர்.தற்போது பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் செல்ல வேண்டுமானால், ஓச்சேரி வழியாக செல்ல வேண்டும் அல்லது வெம்பாக்கம், அய்யங்கார் குளம் வழியாக செல்ல வேண்டும்.எப்படி சென்றாலும், 30 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆற்றில் பொது மக்கள் குளிப்பதற்கும், வேடிக்கை பார்க்க செல்வதை தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆற்றுக்குள் யாரும் செல்லாமல் இருக்க தடுப்பு மற்றும் கயிறு கட்டி பாதுகாப்பு ஏற்படுத்திள்ளனர்.


பழையசீவரத்தில்...காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரம்- பழவேரி பாலாற்றின் குறுக்கே புதிதாக கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி, வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேறி வருகிறது. பழையசீவரம் அருகேயுள்ள திருமுக்கூடல் பகுதியில் பாலாறு, செய்யாறு, வேகவதி என, மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பழையசீவரத்தில், 42.16 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்பட்டது.பணிகள் முடிந்த நிலையில், பருவ மழை பெய்து, தடுப்பணையில் நீர் தேங்கியுள்ளது. தற்போது தொடர் மழையால், இத்தடுப்பணை நிரம்பி, தற்போது, வினாடிக்கு 8,000 கன அடி வீதம், தண்ணீர் வெளியேறி வருகிறது. தடுப்பணையில், பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X