பொது செய்தி

இந்தியா

பூங்கா, மைதானங்களில் சட்டவிரோத கட்டடங்களை

Added : நவ 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'பூங்கா, மைதானங்களில் சட்டவிரோத கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கையளிக்காத, பி.டி.ஏ., பெங்களூரு மாநகராட்சியை சாடிய கர்நாடக உயர்நீதிமன்றம், சிலரை சிறைக்கு அனுப்பினால் தான் சூழ்நிலை சரியாகும்' என எச்சரித்துள்ளது.பெங்களூரின் பல இடங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டது குறித்து கேள்வியெழுப்பி, சட்டசேவைகள் சமிதி,

பெங்களூரு : 'பூங்கா, மைதானங்களில் சட்டவிரோத கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கையளிக்காத, பி.டி.ஏ., பெங்களூரு மாநகராட்சியை சாடிய கர்நாடக உயர்நீதிமன்றம், சிலரை சிறைக்கு அனுப்பினால் தான் சூழ்நிலை சரியாகும்' என எச்சரித்துள்ளது.

பெங்களூரின் பல இடங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டது குறித்து கேள்வியெழுப்பி, சட்டசேவைகள் சமிதி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தது.

மனு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், பூங்காக்கள், மைதானங்களில், கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையளிக்கும்படி, பி.டி.ஏ.,வுக்கும், பெங்களூரு மாநகராட்சிக்கும் உத்தரவிட்டது. ஆனால் அறிக்கையளிக்கவில்லை.

வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை நடந்தது. உத்தரவை பின்பற்றாத பி.டி.ஏ., மற்றும் மாநகராட்சியை கடுமையாக கண்டித்தது. 'நீதிமன்ற உத்தரவை அரசு நிறுவனங்கள் பொருட்படுத்துவதில்லை. சிலரை சிறைக்கு அனுப்பினால் அனைத்தும் சரியாகும். நீதிமன்ற கவுரவ விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனரை சிறைக்கு அனுப்ப வேண்டி வரும். 'பூங்காக்கள், மைதானங்களில் சட்டவிரோத கட்டடங்கள் கட்டுவதை, சகிக்க முடியாது. 'பெரியவர்கள்' மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் தயங்கலாம். ஆனால் நாங்கள் தயங்க மாட்டோம். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால்

அதிகாரிகளுக்கு தொந்தரவு நிச்சயம்' என, எச்சரித்தது.சட்ட விரோத கட்டடங்கள் குறித்து அறிக்கையளிக்க 10 நாட்கள் கால அவகாசம் அளிக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகள் மன்றாடியதால் இறுதி வாய்ப்பளித்து விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X