பொது செய்தி

இந்தியா

வட கிழக்கு பருவ மழை; ஹாவேரி மாவட்டத்தில் விவசாயிகள் விதைப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஹாவேரி : வட கிழக்கு பருவ மழை நல்ல முறையில் பெய்து வருவதால், ஹாவேரி மாவட்டத்தில் விவசாயிகள் விதைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.ஹாவேரி மாவட்டத்தில் கோடை மழை, பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. அப்போது விதைத்த பயிர்களும் பலனை கொடுக்கவில்லை.தற்போது வட கிழக்கு பருவ மழை நல்ல முறையில் பெய்து விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால் அவர்களும் விவசாய பணிகளை

ஹாவேரி : வட கிழக்கு பருவ மழை நல்ல முறையில் பெய்து வருவதால், ஹாவேரி மாவட்டத்தில் விவசாயிகள் விதைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹாவேரி மாவட்டத்தில் கோடை மழை, பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. அப்போது விதைத்த பயிர்களும் பலனை கொடுக்கவில்லை.தற்போது வட கிழக்கு பருவ மழை நல்ல முறையில் பெய்து விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

இதனால் அவர்களும் விவசாய பணிகளை ஆரம்பித்துள்ளனர்.பெரும்பாலான பகுதிகளில் நிலத்தை பண்படுத்தி, விதைப்பு பணிகள் நடக்கிறது. விதைப்புக்காக ஏர், கலப்பை, கடப்பாரை, மண்வெட்டி, கதிர் அறுக்கும் அரிவாள், கூடை போன்ற விவசாய உபகரணங்களை சரிசெய்து வருகின்றனர். காளைகளை வைத்து, ஏர் ஓட்டும் விவசாயிகள், தங்களது மாடுகளை தயார்படுத்தி வருகின்றனர்.டிராக்டரை பயன்படுத்துவோர் அதில், இணைக்க செயற்கை கலப்பை சீரமைக்கும் பணியில் மும்முரமாக உள்ளனர்.

தோட்டக்கலைத்துறை துறையினர் இந்த ஆண்டு 3.50 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளும் இலக்கை கொண்டுஉள்ளனர்.இதற்காக விவசாயிகளுக்கு ஆலோசனைகள், ஊக்கம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உரங்கள், விதைகள் இருப்பு வைக்கும் பணிகளும் நடக்கிறது.நிர்ணயித்த விலையை விட அதிகமான விலையில் உரம் விற்றால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு, விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X