பொது செய்தி

இந்தியா

பத்மஸ்ரீ' விருது பெற்ற ஹரேகலா ஹாஜப்பா; செருப்பு அணியாதது குறித்து விளக்கம்

Added : நவ 10, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மங்களூரு : 'பத்மஸ்ரீ' விருது பெற்று டில்லியிலிருந்து மங்களூரு திரும்பிய ஹரேகலா ஹாஜப்பா, தான் செருப்பு அணியாதது குறித்து விளக்கம் அளித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த ஹரேகலா ஹாஜப்பா, பஸ் நிலையத்தில் ஆரஞ்சு பழங்களை விற்று ஏழை குழந்தைகளுக்காக பள்ளி கட்டினார்.அவரது சமூக சேவையை பாராட்டி, 2020 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய
பத்மஸ்ரீ' விருது பெற்ற  ஹரேகலா ஹாஜப்பா;  செருப்பு அணியாதது குறித்து விளக்கம்

மங்களூரு : 'பத்மஸ்ரீ' விருது பெற்று டில்லியிலிருந்து மங்களூரு திரும்பிய ஹரேகலா ஹாஜப்பா, தான் செருப்பு அணியாதது குறித்து விளக்கம் அளித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரை சேர்ந்த ஹரேகலா ஹாஜப்பா, பஸ் நிலையத்தில் ஆரஞ்சு பழங்களை விற்று ஏழை குழந்தைகளுக்காக பள்ளி கட்டினார்.அவரது சமூக சேவையை பாராட்டி, 2020 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்திருந்திருந்தது.

அவ்விருது, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டில்லியில் நேற்று வழங்கினார்.அங்கிருந்து விமானம் மூலம் ஹாஜப்பா நேற்று மங்களூரு அழைத்து வரப்பட்டார். மாவட்ட அதிகாரிகள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.அவருக்காக மாவட்ட நிர்வாகம் கார் அனுப்பியிருந்தது.

நேராக கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். கலெக்டர் ராஜேந்திரா சால்வை, மாலை அணிவித்து கவுரவித்தார்.பின், ஹரேகலா ஹாஜப்பா கூறியதாவது:நாட்டின் 130 கோடி மக்களின் பிரதமர் நரேந்திர மோடியை, 6 அடி இடைவெளியில் பார்த்து பூரித்து போனேன். மங்களூரிலிருந்து டில்லிக்கும், அங்கிருந்து மீண்டும் விமானத்தில் அழைத்து வந்தனர். அனைத்து இடத்திலும் சிறப்பாக கவனித்து கொண்டனர்.

ஏதோ ஒரு மூலையில் ஆரஞ்சு பழங்கள் விற்று கொண்டிருந்த எனக்கு, நாட்டின் உயரிய விருது வழங்கியதும், ஜனாதிபதி முன் நின்று பேசியதும் என்னால் நம்ப முடியவில்லை. விருது வழங்கி எனக்கு செய்த விருந்தோம்பல் ஜீரணிக்க முடியவில்லை. என் கையில் அடிபட்டதால், 'பேன்டேஜ்' கட்டியிருந்தேன். அதை பிரதமர் தொட்டு பேசினார்.

எப்படி ஆனது என்று கேட்டார்.விருது வாங்க டில்லிக்கு செல்வதற்கு முன், கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் வீட்டுக்கு வந்தனர். அவர்களுக்கு இளநீர் வெட்டி கொடுத்த போது, அரிவாள் பட்டதால் காயம் ஏற்பட்டது என்றேன். அவர் கண்கலங்கியபடி என்னை கை கூப்பி வணங்கினார்.ஜனாதிபதி, பிரதமர் முன் செல்லும் போது, செருப்பு அணிந்து செல்வது சரியாக படவில்லை. அதனால் செருப்பு அணியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202107:01:42 IST Report Abuse
Vijayan Singapore இந்த ஆட்சியில் எளியவர்கள் கவ்ரவிக்கப்படுகிறார்கள், மிகவும் சிறப்பான ஆட்சி இதுதான்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத்தேடி அலைக்கின்றார் மலையருவியில் கொட்டும் நீரூற்று போன்ற தூய ஆன்மா இவர் நடமாடும் இறைவன் என போற்ற தக்கவர்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-நவ-202116:51:20 IST Report Abuse
r.sundaram தற்போது சரியான நபர்களுக்கு பத்ம விருதுகள் போய் சேருகின்றன. பாரத் மாதங்கி ஜெய்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X