பொது செய்தி

இந்தியா

மின்டோ கண் மருத்துவமனை 125வது ஆண்டு கொண்டாட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : மின்டோ கண் மருத்துவமனை 125வது ஆண்டை கொண்டாடியது.பெங்களூரில் சந்தைபேட்டை ரோட்டில் 1896ல் சிறிய கிளினிக்காக 'மின்டோ கண் மருத்துவமனை' ஆரம்பிக்கப்பட்டது.அப்போதைய வைஸ்ராய் ஆக இருந்த மின்டோ நினைவாக, 'மின்டோ கண் மருத்துவமனை' என பெயரிடப்பட்டது. இது 1913ல் பெரிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. 1982ல் 'மின்டோ கண் சிகிச்சை வட்டார நிறுவனம்' என பெயர் மாற்றப்பட்டது. இங்கு

பெங்களூரு : மின்டோ கண் மருத்துவமனை 125வது ஆண்டை கொண்டாடியது.பெங்களூரில் சந்தைபேட்டை ரோட்டில் 1896ல் சிறிய கிளினிக்காக 'மின்டோ கண் மருத்துவமனை' ஆரம்பிக்கப்பட்டது.

அப்போதைய வைஸ்ராய் ஆக இருந்த மின்டோ நினைவாக, 'மின்டோ கண் மருத்துவமனை' என பெயரிடப்பட்டது. இது 1913ல் பெரிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. 1982ல் 'மின்டோ கண் சிகிச்சை வட்டார நிறுவனம்' என பெயர் மாற்றப்பட்டது. இங்கு தினமும் 800க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 50க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். நவீன உபகரணங்களுடன் 300 படுக்கை வசதிகள், நான்கு அறுவை சிகிச்சை அறைகள் உள்ளன.

தினமும் 40 முதல் 50 அறுவை சிகிச்சை நடக்கும்.ஆண்டுக்கு சாரசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். 250 முதல் 300 கண் தானம் பெறப்படுகிறது. இதற்காக கண் வங்கியும் உள்ளது. பல்வேறு கிராமம், குடிசை பகுதிகளுக்கு சென்று கண் சிகிச்சை முகாம் நடத்தி தேவைப்படுவோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மின்டோ மருத்துவமனை, நேற்று 125 ஆண்டை கொண்டாடியது. இதை முன்னிட்டு 125 மரக்கன்றுகள் நடப்பட்டது. மருத்துவமனை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X