தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 136 ஏரிகள் நிரம்பியது

Added : நவ 10, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 136 ஏரிகள் நிரம்பியுள்ளன.மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. .இதனால் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் மூலம் ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 136 ஏரிகள் நிரம்பியுள்ளன.மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பி உபரி நீர் ஆறுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
.
இதனால் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் மூலம் ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு, தண்ணீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் விருத்தாச்சலம் கோட்டத்திற்குட்பட்ட 211 ஏரிகள், விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 114 ஏரிகள், திருவண்ணாமலை கோட்டத்திற்குட்பட்ட 10 ஏரிகள் என மொத்தம் 335 ஏரிகள் உள்ளன..

இதில், 136 ஏரிகள் முழுதும் நிரம்பி, அதன் உபரிநீர் கோடி வழியாக வெளியேறுகிறது. மேலும், 39 ஏரிகள் 76 சதவீதத்திற்கு மேலும், 34 ஏரிகள் 51 சதவீதத்திற்கு மேலும், 87 ஏரிகள் 26 சதவீத கொள்ளளவுக்கு மேலும், 39 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழும் நிரம்பியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X