பொது செய்தி

இந்தியா

17

Added : நவ 10, 2021
Share
Advertisement
வேலை இல்லாத பாத யாத்திரை! கை காரங்க ஆட்சியின் போது, மேகதாது அணையை கட்டத்தவறி இப்போது அவங்களுக்கு வேலை இல்லாததால் விரைவில் அணை கட்டணுமுன்னு பாதயாத்திரை நடத்த போறாங்கன்னு அறிவிச்சிட்டாங்களாம்.அவங்களோட காலத்திலேயே மேகதாது அணையை கட்டி முடிச்சிருக்கலாமே. அப்போது செய்ய தவறி, எங்கள் மீது குற்றம் சாட்டி பாதயாத்திரை நடத்தப்போறாங்களாம்னு மாநில சி.எம்., பதிலடி கொடுத்து

வேலை இல்லாத பாத யாத்திரை!

கை காரங்க ஆட்சியின் போது, மேகதாது அணையை கட்டத்தவறி இப்போது அவங்களுக்கு வேலை இல்லாததால் விரைவில் அணை கட்டணுமுன்னு பாதயாத்திரை நடத்த போறாங்கன்னு அறிவிச்சிட்டாங்களாம்.

அவங்களோட காலத்திலேயே மேகதாது அணையை கட்டி முடிச்சிருக்கலாமே. அப்போது செய்ய தவறி, எங்கள் மீது குற்றம் சாட்டி பாதயாத்திரை நடத்தப்போறாங்களாம்னு மாநில சி.எம்., பதிலடி கொடுத்து கூறுவதுடன், மேகதாது அணை விவகாரம் நீ

திமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்குது. நாங்கள் சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்னு சொல்லி இருக்காரு. கை காரங்களுக்கு வேற பிரச்னை கிடைக்காததால் 'மேகதாது' பக்கம் திசை திரும்பி இருக்குதுன்னு ஆளும் கட்சிக்காரங்க சொல்றாங்க.

துளைத்தெடுப்பு!புல்லுக்கட்டு கட்சிக்காரங்களும் ரெண்டு மாதத்துக்கு முன்னதாகவே மேகதாதுக்காக பாதயாத்திரை நடத்த போவதாக அறிவிச்சாங்க. பூ கட்சியின் முதல்வரை, கவர்னரை சந்தித்து கோரிக்கையும் விடுத்தாங்க.அப்போ, கை காரங்க சும்மா இருந்தாங்க.

இவங்களோட போராட்ட திட்டத்தை 'ஹைஜாக்' செய்துட்டாங்க.இதுக்கு புல்லுக்கட்டுக்காரங்க சும்மா இருப்பாங்களா, 'கிருஷ்ணா நதியை நோக்கி போராட்டம்னு கை காரங்க அறிவிச்சாங்களே என்னாச்சு. எவ்வளவு நீர் வந்தது.'எத்தினஹொளே' திட்டத்துக்கு

50 ஆயிரம் ரூபாய் கோடியை செலவழிச்சாங்களே கிடைத்ததா தண்ணீர், என புல்லுக்கட்டுக்காரங்க கேள்வி மேலே கேள்வி கேட்ஐ துளைக்கிறாங்க.வாரிசு அரசியல் இல்லாத கட்சி எது?இல்லாத ஒன்றை இவர்களாகவே உருவாக்கி, குழப்பத்தை ஏற்படுத்துறாங்கன்னு பூக்காரர்களின் டுவிட்டர் தகவல் பற்றி, கை காரர்கள் விமர்சனம் செய்றாங்க.

மாநில கை தலைவரு தனது மகளை பாலிடிக்சில் கொண்டு வருவதா எப்போ கூறினார். 'மாஜி' முதல்வர், தனது மகனை கட்சியின் துணைத் தலைவர் ஆக்கினதும், அவரின் முதல்வர் பதவியே காலி ஆயிடுச்சே அதை மறக்கலாமா.வாரிசு அரசியல் எங்கு இல்லை;

புரட்டி பார்க்கணும். பூ கட்சியில் வாரிசு பாலிடிக்ஸ் இல்லன்னு சொல்ல முடியுமா. அடுத்த அசம்பிளி தேர்தலில் பூ கட்சியில் வாரிசுகளுக்கு 'நோ சான்ஸ்'ன்னு கூறுவாங்களான்னு கோலார் மாவட்ட கைக்கார தலைவரு சவால் விட்டிருக்காருபிரசாரத்தின் பெரிய ஆயுதம்!'மாஜி' முதல்வரு சினிமா தொழிலில் இருந்தவரு.

அதனாலே ஒரு டி.வி., சேனலையும் நடத்தினாரு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் டி.வி., சினிமா பக்கம் தலைகாட்டுவதுடன், தனது ஜூனியரையும் ஹீரோ ஆக்கி பார்த்தாரு. ஊடகம் மீதும் எப்போதுமே ஆர்வம் தானாம். அசம்பிளி தேர்தலில் தமது கொள்கை கோட்பாடுகள் ஒவ்வொரு வாக்காளர்களையும் போய் சேரணுமுன்னு பத்திரிகையும் ஆரம்பிச்சிருக்காரு. ஊடக தொடர்பு அவசியம் என்பதை உணர்ந்திருக்காங்க. அசம்பிளி தேர்தலுக்கு கை கொடுக்குமுன்னு நம்புறாங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X