பொது செய்தி

இந்தியா

மறைந்த நடிகர் புனித் சமாதியில் நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி அஞ்சலி

Added : நவ 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : மறைந்த நடிகர் புனித் சமாதியில் நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.நடிகர் புனித், அக்டோபர் 29ல் மாரடைப்பால் உயிரிழந்தார். அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.அதில், 'எங்கள் தந்தை கருணாநிதி இறந்த போது, நடிகர் புனித் கோபாலபுரத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறினார். இன்னும் என்

பெங்களூரு : மறைந்த நடிகர் புனித் சமாதியில் நேற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் புனித், அக்டோபர் 29ல் மாரடைப்பால் உயிரிழந்தார். அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார்.அதில், 'எங்கள் தந்தை கருணாநிதி இறந்த போது, நடிகர் புனித் கோபாலபுரத்தில் உள்ள எங்கள் வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறினார். இன்னும் என் நினைவில் நீங்காமல் பசுமையாக உள்ளது. புனித் இறந்த தகவலை கேட்டு வேதனை அடைந்தேன்.

அவரது மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. 'தனித்துவம் வாய்ந்த நடிகரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் துக்கத்தில் உள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என, கூறியிருந்தார். நேற்று புனித் இறந்த 12வது நாளை முன்னிட்டு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் ரசிகர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ், கர்நாடக தி.மு.க., நிர்வாகிகள் பெங்களூரு கன்டீரவா ஸ்டுடியோவில் உள்ள புனித் சமாதிக்கு வந்து விளக்கேற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X