பொது செய்தி

இந்தியா

சாலை பள்ளங்களை மூடாத பி.பி.எம்.பி., பொறியாளர் நாகராஜ், 'சஸ்பெண்ட்'

Added : நவ 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : சாலை பள்ளங்களை மூடாத பி.பி.எம்.பி., பொறியாளர் நாகராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சில மாதங்களாக மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை பள்ளங்களை மூடுமாறு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பி.பி.எம்.பி., கிழக்கு மண்டல சாலை

பெங்களூரு : சாலை பள்ளங்களை மூடாத பி.பி.எம்.பி., பொறியாளர் நாகராஜ், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சில மாதங்களாக மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை பள்ளங்களை மூடுமாறு, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பி.பி.எம்.பி., கிழக்கு மண்டல சாலை அடிப்படை வசதிகள் பிரிவு நிர்வாக பொறியாளர் நாகராஜ் அலட்சியமாக இருந்தார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சாலை பள்ளங்களை மூடவில்லை என அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.பெங்களூரு நகர பகுதியில் 2,000 பள்ளங்கள் மட்டுமே உள்ளதாக பி.பி.எம்.பி., அதிகாரிகள் கூறி வந்தனர்.ஆனால் குத்தகை பெற்ற ஜே.எம்.சி., நிறுவனத்தினர் .
இரண்டு மாதத்தில் 31 ஆயிரம் சாலை பள்ளங்களை மூடி உள்ளதாக கணக்கு காட்டி உள்ளது.ஏழு கோடி ரூபாய்க்கான பில்லை கொடுத்துள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X