பொது செய்தி

இந்தியா

ஒனகே ஓபவ்வா ஜெயந்தி

Added : நவ 10, 2021
Share
Advertisement
பெங்களூரு: கர்நாடக வரலாற்றில் இடம்பிடித்த பல்வேறு தலைவர்களுக்கு அரசு சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சித்ரதுர்கா வீரமங்கை எனப்படும் ஒனகே ஓபவ்வாவின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும் என கன்னட மற்றும் கலாசாரத்துறை உத்தரவிட்டுள்ளது.விஷ வாயு கசிவுமைசூரு: மைசூரு டி.நரசிபுராவில் உள்ள வாட்டர் பில்டர்

பெங்களூரு: கர்நாடக வரலாற்றில் இடம்பிடித்த பல்வேறு தலைவர்களுக்கு அரசு சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சித்ரதுர்கா வீரமங்கை எனப்படும் ஒனகே ஓபவ்வாவின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக மாநிலம் முழுவதும் கொண்டாட வேண்டும் என கன்னட மற்றும் கலாசாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

விஷ வாயு கசிவு

மைசூரு: மைசூரு டி.நரசிபுராவில் உள்ள வாட்டர் பில்டர் ஹவுஸ் தொழிற்சாலையில் நேற்றிரவு திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், விஷ வாயு கசிவை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மூன்று வீரர்கள் மயங்கி விழுந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழிற்சாலைக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

சுற்றுப்புற கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.நடிகர் சங்கர் நாக் பிறந்த நாள்பெங்களூரு: மறைந்த நடிகர் சங்கர் நாக்கின் 67வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடினர். ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்கள் அவரது உருவப்படத்தை வைத்து பூஜை செய்தனர். கன்னட திரையுலகினர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

வாரிய தலைவர் மாரடைப்பால் மரணம்கோலார்: மாநில ஜவுளி அடிப்படை வசதி மற்றும் விசைத்தறி வளர்ச்சி வாரிய தலைவர் ஸ்ரீராம், 55 கோலாரில் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். இவர், இதற் முன் கோலார் மாவட்ட பா.ஜ., தலைவராகவும், கோலார் நகர வளர்ச்சி ஆணைய தலைவராகவும் இருந்துள்ளார்.

மாநில பா.ஜ., தலைவர் நளின் குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.கரும்பு டிராக்டர் பல்டிபெலகாவி: பெலகாவி அருகே உள்ள கூகடனுாரா கிராமத்தில் நேற்று கரும்பு லோடு ஏற்றிய டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. மழை பெய்து சாலைகள் சேறும், சகதியுமாக இருந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரத்தில் கவிழ்ந்தது. யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.சட்ட அறிவு இயக்கம்துமகூரு: துமகூரு கண்ணாடி மாளிகையில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து, மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் சுதந்திர தின பொன்விழாவை ஒட்டி சட்ட அறிவு இயக்கம் நிகழ்ச்சி நடந்தது. ஐகோர்ட் நீதிபதி வீரப்பா துவக்கி வைத்தார்.

புதிய கலெக்டர் அலுவலக பூமி பூஜைசித்ரதுர்கா: சித்ரதுர்கா அருகே உள்ள குன்சிகநாள் கிராமத்தில் புதிய கலெக்டர் அலுலவக கட்டடம் கட்டுமான பணிகளின் தொடக்க விழா நடந்தது. சித்ரதுர்கா பா.ஜ., - எம்.எல்.ஏ., திப்பா ரெட்டி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். வரும் ஆகஸ்ட் 15க்குள் கட்டட பணிகளை முடிக்க வேண்டும் என குத்தகைதாரர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

விவசாயிகள் மாநாடுராய்ச்சூர்: ராய்ச்சூர் லிங்கசகூரில் உள்ளஷாதி மகால் மைதானத்தில் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது. இதில், டில்லி ஒருங்கிணைந்த கிஷான் மோர்ச்சா பிரமுகர் ஹரனேக் சிங் பங்கேற்றார். அவர் கூறுகையில், “விவசாயிகள் உரிமைகளை பெற ராணுவ வீரர்களை போல போராட வேண்டும்,

” என்றார்.விவசாயிக்கு வீர வணக்கம்கதக்: கதக் நரகுந்தாவில் நேற்று வீரமரணம் அடைந்த விவசாயி கட்லிகொப்பா நினைவிடத்தில் 'வீர வணக்க' நிகழ்ச்சி நடந்தது. இதில், வேளாண் துறை அமைச்சர் பி.சி. பாட்டீல், மலர் துாவி மரியாதை செய்தார். ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.வீடு வீடாக தடுப்பூசி முகாம்தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மங்களூரில் இன்னும் முழு அளவில் கொரோனா தடுப்பூசி போடப்படவில்லை.

முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்களில் பெரும்பாலானோர், இன்னும் இரண்டாவது தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. இவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடும் நோக்கில் வீடு வீடாக சென்று சோதனை நடத்தும் தடுப்பூசி முகாம் மங்களூரில் இன்று துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X