பெங்களூரு ; விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு ஆக்கும் வகையில், புதிய உபகரணங்கள் கொண்ட விவசாய கண்காட்சி பெங்களூரு ஜி.கே.வி.கே., வளாகத்தில் நாளை துவங்குகிறது.
பெங்களூரு விவசாய பல்கலைக்கழகம் சார்பில், ஜி.கே.வி.கே., வளாகத்தில் ஆண்டுதோறும் விவசாய கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டு கண்காட்சி நடத்துவது தொடர்பாக பல்கலை துணை வேந்தர் ராஜேந்திர பிரசாத் நேற்று கூறியதாவது:இந்தாண்டின் விவசாய கண்காட்சி நவம்பர் 11, 12, 13, 14 ஆகிய நான்கு நாட்கள் நடக்கிறது. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு ஆக்கும் வகையில் புதிய உபகரணங்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிற்சி அளிக்கப்படும். புதிய ரக நெல், வரகு, கேழ்வரகு, சாமை, கரும்பு, பலாப்பழம் என 10 புதிய ரகங்களும், 28 தொழில்நுட்ப உபகரணங்களும் அறிமுகப்படுத்தப்படும். விவசாயத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். யூடியூப், இணையதளம், டுவிட்டர், முகநுால், இன்ஸ்டாகிராம், ஜூம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE