பொது செய்தி

இந்தியா

முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று காலை, டில்லி புறப்பாடு

Added : நவ 10, 2021
Share
Advertisement
பெங்களூரு : பா.ஜ., மேலிட தலைவர்களின் அழைப்பின் பேரில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று காலை, டில்லி புறப்படுகிறார். பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது என இரண்டு முக்கிய ஆலோசனை

பெங்களூரு : பா.ஜ., மேலிட தலைவர்களின் அழைப்பின் பேரில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று காலை, டில்லி புறப்படுகிறார்.

பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராவது என இரண்டு முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.நேற்றிரவு 7:00 மணியளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

தேசிய பொது செயலர் சி.டி.ரவி, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா, துணை தலைவர் நிர்மல் குமார் சுரானா உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.அடுத்த மாதம் நடக்கவுள்ள எம்.எல்.சி., தேர்தலுக்கு வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஹனகல் இடைத்தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என்று மேலிட பொறுப்பாளர் கேள்வி எழுப்பினார்.அதே வேளையில் எந்த காரணத்துக்கும் பெங்களூரு மாநகராட்சி தேர்தலை ஒத்தி வைக்காமல் உரிய நேரத்தில் நடத்த தயாராகுங்கள் என்று அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், மேலிட தலைவர்கள் அழைப்பின் பேரில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று காலை 9:45 மணிக்கு டில்லி புறப்படுகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உட்பட முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார். இன்றிரவு டில்லியில் தங்கும் அவர், நாளை பெங்களூரு திரும்புகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X