பொது செய்தி

தமிழ்நாடு

பெண் கொலை முயற்சி வழக்கு மீனவருக்கு 7 ஆண்டுகள் சிறை

Added : நவ 10, 2021
Share
Advertisement
கடலுார் : பெண்ணை கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில், மீனவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.புதுச்சேரி மாநிலம் பூரணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் சுப்ரமணியன், 40; இவர், கடலுார் அடுத்த சொத்திக்குப்பத்தில் மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். இவர், 2017 ஆக., 24ல், நொச்சிக்காடு கிராமத்தில் உள்ள பாபு மனைவி மலர்கொடி, 35;

கடலுார் : பெண்ணை கட்டையால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில், மீனவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து,

கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.புதுச்சேரி மாநிலம் பூரணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் சுப்ரமணியன், 40; இவர், கடலுார் அடுத்த சொத்திக்குப்பத்தில் மாமியார் வீட்டில் தங்கியிருந்தார். இவர், 2017 ஆக., 24ல், நொச்சிக்காடு கிராமத்தில் உள்ள பாபு மனைவி மலர்கொடி, 35; என்பவரின் வயலில் மரக்கிளையை வெட்டினார்.

இதை, மலர்கொடி தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த சுப்ரமணியன், கட்டையால் மலர்கொடியின் முகத்தில் அடித்து கொலை செய்ய முயன்றார். காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்றார்.புகாரின் பேரில், சுப்ரமணியன் மீது கடலுார் துறைமுக போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர் மீது கடலுார் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.அவர் சுப்ரமணியனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் செல்வபிரியா ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X