பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் கோவிலில் சூரசம்ஹாரம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
மயிலம் : விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் வள்ளி, தெய்வானை சமேத , சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில் மூலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு பாலசித்தர்

மயிலம் : விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் வள்ளி, தெய்வானை சமேத , சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில் மூலவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

11:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், பாலசித்தர், ஸ்ரீவள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு பால், சந்தன அபிஷேகம் நடந்தது.இரவு 7:00 மணிக்கு பாலசித்தர் சன்னதியில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து 8:30 மணிக்கு முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும் நடந்தது.இந்நிகழ்வை தெருக்கூத்து கலைஞர்கள் சுவாமி வேடமிட்டு நாடகமாக நடித்து காண்பித்தனர்.தொடர்ந்து சுவாமி மலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X