பொது செய்தி

இந்தியா

மசாஜ் சென்டரில் சிறுமி பலாத்காரம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மசாஜ் சென்டரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பெண் உரிமையாளரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில் போலீசார் அக். 16ம் தேதி சோதனை நடத்தினர்.அதில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மற்றும்

புதுச்சேரி : மசாஜ் சென்டரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பெண் உரிமையாளரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில் போலீசார் அக். 16ம் தேதி சோதனை நடத்தினர்.அதில், பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.காப்பகத்தில் ஒப்படைத்த 4 பெண்களில் ஒருவர், 17 வயது சிறுமி என தெரியவந்தது.

விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மசாஜ் சென்டருக்கு வந்து சென்ற 40 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.மசாஜ் சென்டர் நடத்திய பெண்ணை போலீஸ் காவலில் விசாரிக்க, உருளையன்பேட்டை போலீசார் மனுதாக்கல் செய்தனர். 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் அப்பெண்ணை காவலில் எடுத்த உருளையன்பேட்டை போலீசார், மசாஜ் சென்டருக்கு யார் யார் வந்தனர்.அதில் சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் யார், யார் என்ற விபரங்களை வாக்குமூலமாக பெற்றுள்ளனர்.அப்பெண்ணின் வாக்குமூலத்தின்படி, அடுத்த சில நாட்களில், மசாஜ் சென்டருக்கு வந்த ரெகுலர் வாடிக்கையாளர்களில், சிறுமி பாலியல் பலாத்காரத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X