பொது செய்தி

தமிழ்நாடு

கன மழை முன்னெச்சரிக்கை சிதம்பரத்தில் ஆலோசனைக் கூட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சிதம்பரம் : கடலுார் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. கடலுார் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிதம்பரம் கோட்ட கண்காணிப்பாளராக சிறு, குறு தொழில் நிறுவனங்களின் துறை செயலர் அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு அவரது தலைமையில்

சிதம்பரம் : கடலுார் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

கடலுார் மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிதம்பரம் கோட்ட கண்காணிப்பாளராக சிறு, குறு தொழில் நிறுவனங்களின் துறை செயலர் அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு அவரது தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ரஞ்சித்சிங், சிதம்பரம் ஆர்.டி.ஓ., ரவி, டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ், துணை ஆட்சியர்கள் துரைசாமி, லுார்துசாமி, ஜெயக்குமார், சிவானந்தம், கண்ணன், விக்னேஷ்வரன் மற்றும் பொதுப்பணி துறை சிதம்பரம் செயற்பொறியாளர் சாம்ராஜ், பி.டி.ஓ.,க்கள் சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் அருண்ராய் பேசுகையில், கன மழை சமயங்களில் வருவாய், காவல் துறை இணைந்து செயல்பட வேண்டும். நீர் நிலைகளில் மீன் பிடிக்கவோ, குளிக்கவோ இறங்க வேண்டாம் என கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எந்த நேரத்திலும் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தகவல்களை உடனுக்குடன் தெரிவித்து மக்களை பாதுகாக்க வேண்டும். வெள்ளம் பாதிக்கும் இடங்களிலிருந்து பொது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X