காரைக்கால் : காரைக்காலில் அரசு பள்ளி ஆசிரியரின் மனைவி மனநிலை பாதித்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி காரைக்கால், கோட்டுச்சேரி, மேரி தெரு, அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 44; மாற்றுத்திறனாளியான இவர், அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி லோகசர்மா, 36. இவர்களுக்கு மகதி, 9, என்ற மகள் உள்ளார். லோகசர்மா அடிக்கடி கோபத்தில் கணவர் மற்றும் உறவினர்களை பேசுவது வழக்கம்.இதனால் ஜெய்சங்கர், லோகசர்மாவை மனநல மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று வந்தார். நேற்று முன்தினம் ஜெய்சங்கர் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க வெளியே சென்றார். வீட்டில் லோகசர்மா மற்றும் மகதி இருந்தனர்.
அப்போது லோகசர்மா தனது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோட்டுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டிபால் வழக்குப் பதிந்து விசாரித்தார். அதில், மகள் மகதியை லோகசர்மா கழுத்தை நெரித்ததில் அவர், மயங்கி விழுந்தது தெரியவந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement