விழுப்புரம் : விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சிக்கிய மூதாட்டியை இளைஞர்கள் உயிருடன் மீட்டனர்.
விழுப்புரம் அடுத்த ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகம்மாள், 60; இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையை கடக்க முயன்றார். அப்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தண்ணீரில் தத்தளித்தார்.இதைப்பார்த்த அருளவாடி இளைஞர்கள், நாகம்மாளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.மயக்க நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.ஆற்றில் மூழ்கிய மூதாட்டியை உயிருடன் மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.