பருவநிலை மாற்ற ஆபத்து: கடல் நீரில் நின்று உரையாற்றிய அமைச்சர்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கான்பரா: ஆஸ்திரேலியாவுக்கு அருகே பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான துவாலுவின் வெளியுறவு அமைச்சர், தனது தாழ்வான நாடு காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் விதமாக, ஐ.நா., காலநிலை மாநாட்டிற்காக கடல் நீரில் முழங்கால் ஆழத்தில் நின்று உரையாற்றினார். அப்படங்கள் டிரெண்டாகியுள்ளன.ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஐ.நா.,வின் 26-வது பருவநிலை மாநாடு
பருவநிலை மாற்றம்,ஆபத்து, கடல் நீர், வெளியுறவு அமைச்சர்,

கான்பரா: ஆஸ்திரேலியாவுக்கு அருகே பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான துவாலுவின் வெளியுறவு அமைச்சர், தனது தாழ்வான நாடு காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் விதமாக, ஐ.நா., காலநிலை மாநாட்டிற்காக கடல் நீரில் முழங்கால் ஆழத்தில் நின்று உரையாற்றினார். அப்படங்கள் டிரெண்டாகியுள்ளன.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஐ.நா.,வின் 26-வது பருவநிலை மாநாடு அக்டோபர் 31 தொடங்கி நவ., 12 வரை நடக்கிறது. இந்தியா சார்பில் இம்மாநாட்டில் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது 2070-ல் இந்தியா பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை அடையும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஐ.பி.சி.சி., எனப்படும் காலநிலை மாற்றம் பற்றிய நாடுகளுக்கிடையேயான குழு, காலநிலை தாக்கம் பற்றிய அறிக்கையை சமர்பித்தது. மனிதர்களின் நடவடிக்கையால் புவியின் வெப்பநிலை உயர்ந்து வருவதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில் இம்மாநாட்டிற்காக தீவு நாடான துவாலுவின் வெளியுறவு அமைச்சர் வீடியோ உரையை பதிவு செய்துள்ளார். அது அந்நாட்டின் தலைநகர் புனாபுட்டியின் கடைசியிலிருக்கும் போங்காபேலி தீவில் எடுக்கப்பட்டுள்ளது. கோட் சூட் அணிந்து கொண்டு அமைச்சர் முழங்கால் அளவு கடல் நீரில் நின்று பேசுகிறார். இது பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.


latest tamil news
அந்த உரையில் அமைச்சர் சைமன் கூறியதாவது: காலநிலை மாற்றம் மற்றும் கடல் மட்ட உயர்வின் தாக்கங்கள் காரணமாக துவாலுவில் நாங்கள் எதிர்கொள்ளும் நிஜ வாழ்க்கை சூழலுடன் இது இணைக்கிறது. மேலும் இந்த அறிக்கை, காலநிலை மாற்றம் காரணமாக மனிதர்கள் இடம்பெயரும் பிரச்னையை தீர்க்க துவாலு எடுக்கும் துணிச்சலான நடவடிக்கையை எடுத்துக்காட்டுகிறது. தாழ்வான நாடுகளில் உயிர்வாழ்வது ஆபத்தில் உள்ளது. அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.


Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202117:39:13 IST Report Abuse
சம்பத் குமார் 1). எதார்த்தமான செயல். உண்மையின் பிரதிபலிப்பு.2). நமக்கு மற்றும் உலகிற்கு இது நிகழ வெகுகாலம் இல்லை.3). Electric car, bike, solar, low power consumption products, avoiding plastic, growing trees என்று நாமும் நம் நாடும் இதில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.4). முயற்சி செயாதால் இந்த இலக்கை 2035 உள் அடைந்துவிட முடியும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
10-நவ-202111:00:37 IST Report Abuse
S. Bharani எந்த இந்திய அரசியல் வாதியிடம் இவர் பாடம் கற்றுக் கொண்டார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X