25.கைது செய்யப்பட்ட நேதாஜி

Updated : நவ 11, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஒருபக்கம் நகராட்சி நிர்வாகப் பணி. இன்னொரு பக்கம் விடுதலைப் பணி என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார் நேதாஜி. தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் புரட்சிகரமான கருத்துகளை பேசினார். பல விடுதலைப் போராட்ட வீரர்கள் அவருக்கு நண்பர்களானார்கள். நேதாஜி எந்தவிதமான தீவிர நடவடிக்கையில் இறங்காத போதும் அவர் மீது கொண்டிருந்த கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளாமல்
25.கைது செய்யப்பட்ட நேதாஜி

ஒருபக்கம் நகராட்சி நிர்வாகப் பணி. இன்னொரு பக்கம் விடுதலைப் பணி என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தார் நேதாஜி. தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் புரட்சிகரமான கருத்துகளை பேசினார். பல விடுதலைப் போராட்ட வீரர்கள் அவருக்கு நண்பர்களானார்கள்.

நேதாஜி எந்தவிதமான தீவிர நடவடிக்கையில் இறங்காத போதும் அவர் மீது கொண்டிருந்த கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் அவரது புரட்சிகரமான செயல்களை தடுத்து நிறுத்த அரசு அவர் மீது பொய் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.

1924 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் உறங்கிக்கொண்டிருந்த நேதாஜியை எழுப்பி கைது செய்தார்கள். 'வங்காள குற்றச் சட்டம் 3, பிரிவு 1818 படி நேதாஜியை கைது செய்ய உத்தரவிடுகிறேன்' என்று ஒருவாரண்ட்டை நேதாஜியிடம் நீட்டினார்கள்.

ரகசியமாக ஆயுதங்களை கொண்டு வருகிறார், வெடிமருந்துகளை தயாரிக்கிறார், போலீஸ் அதிகாரிகளை கொல்ல திட்டம் தீட்டி வருகிறார், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார், தனி அடியாள் படை வைத்திருக்கிறார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. அப்போதுதான் நேதாஜிக்கு ஒரு உண்மை புரிந்தது. இரவோடு இரவாக அவசர சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார்.

அது யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம். விசாரணை தேவையில்லை. காரணம் தேவையில்லை. அப்படி ஒரு சட்டம். நேதாஜியை கைது செய்வதற்காகவே பிறப்பிக்கப்பட்ட சட்டம். அந்த சட்டத்தின்படி நேதாஜி கைது செய்யப்பட்டார்.

ஆதலையூர் சூரியகுமார்


மாநில செயலாளர்,


தேசிய சிந்தனைக் கழகம்,

தஞ்சாவூர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-நவ-202100:17:48 IST Report Abuse
மலரின் மகள் வரலாற்றின் மறைக்கப்பட்ட, அறிவிக்க தயங்கப்பட்ட ஏனென்றே தெரியாத அனால் அனைவரும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் நிகழ்வுகளை அரசு வெளிக்கொணரவேண்டும். சில அறிக்கைகள் அரசின் தகவல்கள் சில வருடங்களுக்கு தாமரை மலர்ந்தபிறகு வெளிவந்தது. அதை பெரிய வரலாறாக எழுதவில்லை. நேதாஜியின் புகழை பரப்பவேண்டும். எது தடுக்கிறது அரசிற்கு என்று தெரியவில்லை. வரலாறு பாடத்திட்டம் கட்டயமாக்கப் படவேண்டும் கல்லூரிகளில் கூட. விடுதலை போராட்ட வீரர்களில் நேதாஜி எடுத்த பாதை இன்றும் இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருக்கின்ற பாதை, பெரியவர்களுக்கு ஏற்புடையதும் தான். அன்றைய காலத்தில் இந்திய தேசிய படையை உருவாக்கி டில்லி சலோ என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவரின் ராணுவத்தில் இருந்தோர் தமிழர்கள் கூட. நேதாஜிக்கு இருக்கும் சிறப்பு மிதவாத தலைவர்கள் யாருக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால், மித வாத தலைவர்களை பிடிக்காத ஒரு சிலரேனும் இருக்கலாம் இன்று வரையில் கூட ஆனால் நேதாஜியை பிடிக்காத யாருமே இல்லை. இத்தனைக்கும் நேதாஜி தீவிரவாதத்தை ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரியளவில் எடுத்தார். உலகின் மகோன்னதம் அது. நான் பிரமிக்கும் சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி தான் என்று நான் மட்டும் அல்ல எல்லோரும் சொல்வார்கள். நிரைய எதிர்பார்த்தேன் கட்டுரையில், ஒரே ஒரு சங்கதியை திடுமென முடித்தது போல ஒரு வேற்றுமை தோற்றம் கட்டுரையை படித்ததில். வரலாற்றை படிக்க மலரில் ஆசை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X