பொது செய்தி

இந்தியா

ஆப்கனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அஜித் தோவல்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கனில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், அதன் நிலைமை பற்றி விவாதிக்க, டில்லியில் இன்று(நவ.,10) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க,
AFGHANISTAN, AJITDOVAL, INDIA, NSA, TAJIKISTAN, IRAN, KAZAKASTHAN, NATIONAL SECURITY ADVISOR, ஆப்கானிஸ்தான், அஜித்தோவல், இந்தியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஈரான், தஜகிஸ்தான், கஜகஸ்தான்,

புதுடில்லி: ஆப்கனில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில், அதன் நிலைமை பற்றி விவாதிக்க, டில்லியில் இன்று(நவ.,10) தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, சீனாவுக்கும் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியுள்ளதால், ஆப்கன் நிலைமை பற்றி இந்தியா நடத்தும் பேச்சில், சீனாவால் பங்கேற்க முடியாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




'ஆப்கன் பற்றிய பேச்சில், ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன' என, நமது வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டில்லியில் இன்று(நவ.,10) இந்த கூட்டம் கூடியது.


latest tamil news


Advertisement


இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: இந்த கூட்டத்தை நடத்துவது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. ஆப்கனில் நடக்கும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இது அந்நாட்டு மக்களை மட்டும் அல்லாமல், இந்த பிராந்தியம் மற்றும் அண்டை நாடுகளையும் பாதிக்கும். இந்த நேரத்தில் நமக்கு இடையே ஆலோசனை, ஒத்துழைப்பு, கருத்து பரிமாற்றம் ஆகியவை முக்கியம். நமது ஆலோசனை ஆக்கப்பூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், ஆப்கன் மக்களுக்கும் உதவும் வகையில் இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




கஜகஸ்தான் தேசிய பாதுகாப்பு குழு தலைவர் கரிம் மசிமோவ்: ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலை கொள்ள செய்துள்ளன. ஆப்கனில் சமூக மற்றும் பொருளாதார சூழல் சீரழிந்துள்ளது. பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி ஷம்கனி: ஆப்கனில் இருந்து இடம்பெயர்தல், அகதிகள் பிரச்னைகள் உருவாகி உள்ளது. அங்கு, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்குவதால் மட்டுமே தீர்வு காண முடியும். இதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு பிரச்னைகள் தீர்க்கப்படும் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




தஜகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் குழு செயலர் நஸ்ருல்லா மஹ்முத்ஜோடா: ஆப்கனுடன் நீண்ட எல்லையை கொண்டுள்ளதால், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள சூழலானது, போதை மருந்து கடத்தல், பயங்கரவாதம் உள்ளிட்ட புதிய பிரச்னைகளை எழுந்துள்ளது. ஆப்கன்- தஜகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழல் சிக்கலாகி உள்ளது. அண்டை நாடு என்பதால், ஆப்கன் மக்களுக்கு உதவும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
10-நவ-202120:32:01 IST Report Abuse
GANESUN சயனைடு குடுத்தா கொல்றான் கிழமையையும் நேரத்தையும் கண்டுபுடுச்சி சொல்றதுக்கு,. எல்லாம் முடிஞ்சதுக்கப்பறம் ஊடகங்கள்ள காட்றத பாத்துக்கப்பறம் நாங்கதான்னு வைச்சவனுங்களே கூவறானுங்க அத எதுத்து பேச துப்பில்ல. இங்க ஒற்த்தன் உளர்றான் இன்னோத்தன் "நச்" சுன்றான். பாவம் சொந்த பேரில்லதவனுங்க. டிஎன்ஏ டிசைன் அப்படி.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-202119:32:00 IST Report Abuse
Vittalanand யாரோ ஒருவர் கணித்து சொல்லி இருக்கிறாராமா. 3 ம் உலகப்போர் திபெத் எல்லையில் உருவாகும் யென்றும், அதில் சைனா அழிந்து விடும் என்று.
Rate this:
Cancel
10-நவ-202119:10:05 IST Report Abuse
அப்புசாமி கூடவே அதானி போர்ட்டுகளையும். கெவனியுங்க. போதைப் பொருள் நிறைய வருதாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X