பொது செய்தி

இந்தியா

நாளை கரையை கடக்குது ஒரு காற்றழுத்த தாழ்வு: நவ.,13ல் உருவாகுது இன்னொன்று

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: நவ.,13ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கரையை கடக்கும்தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே ஒன்று உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (நவ.11) கரையை
அந்தமான், வங்க்கடல், காற்றழுத்த தாழ்வு,


புதுடில்லி: நவ.,13ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கரையை கடக்கும்



தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே ஒன்று உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (நவ.11) கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித்தீர்க்கும் என 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news




இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் , நவ.,13ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்காக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10-நவ-202122:30:58 IST Report Abuse
sankaranarayanan இது கலியுகத்தின் அரசு செய்யும் அட்டகாசத்திற்கு பதில் கோயில்கள் மூடப்பட்டன விழாக்கள் தடை செய்யப்பட்டன திருவாச்சூர் மதுரகாளியம்மன் இன்னும் பல கோயில் சிலைகள் உடைக்கப்பட்டன உடைந்து கொண்டே இருக்கின்றன கோயில் நிலங்கள் பறிபோயின கோயில் விக்கிரகங்கள் திருடப்பட்டு எந்த நடவடிக்கைகளும் இல்லாமல் இருக்கின்றன தேர்கள் இழுக்கப்படவில்லை மக்கள் தேர் - திருவிழாக்களில் கலந்து கொள்ள அனுமதி இல்லை கோயில்களில் யாகம் பூஜை செய்ய அனுமதி இல்லை அர்ச்சகர்கள் வாழ்வில் அவனிலை அர்ச்சகர்கள் கோயிலை விட்டு வெளியே செல்லும் நிலை இந்து சமுதாயத்திற்கு - நான்மறை வேதங்களுக்கு இழுக்கு - அறநிலை அதிகாரம் சூறையாடல் இன்னும்பல இவைகளெல்லாம் இருக்கும்போது, இயற்க்கை என்ன வேடிக்கை பார்த்துக்கொண்டா இருக்கும்? இயற்கையின் ஸீற்றம் - தான்டவம் ஆடிக்கொண்டு இருக்கின்றது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
10-நவ-202121:57:16 IST Report Abuse
M  Ramachandran விடியல் மட்டும் பாவம் செய்ய வில்லை. ஊக்குவித்த மக்களும் அந்த பாவ சுமையாய் சுமக்க தான் வேண்டும்.
Rate this:
Cancel
10-நவ-202117:33:01 IST Report Abuse
சம்பத் குமார் 1)..ஈசனே என்ன சோதனை தமிழர்களுக்கு.2). இரண்டு மூன்று நாள் நீங்க காட்டின காட்டில் கண்ணே தெரிய மாட்டேங்குது.3). இதில் திரும்ப ஆரமபத்திலிருந்தா.‌ எங்களால் முடியாது. கொஞ்சம் கேப் விடு இறைவா.4). எங்களை மன்னித்து அருள‌ வேண்டும்.5). முதல்வர் கோவில் திறந்து பூஜை செய்ய அனுமதி கொடுத்து விட்டார்.6). இனிமேல் தவறாமல் எல்லா கால பூஜைகள் பக்தர்களுடன் செய்கிறோம்.7). நாங்கள் இதுவரை உனக்கு பூஜை செய்தாதற்கு தமிழர்களாகிய எங்களை மன்னித்து அருள்வாய்.8). ஈசனே வரும் இந்த இராண்டாவது மழையில் இருந்து எங்களை காப்பாற்று.‌ நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X