பொது செய்தி

தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல்., ஊழியர் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஈரோடு: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களுக்கு சொந்தமான, 14,917 மொபைல் போன் டவர், கண்ணாடி இழை கேபிள்களில், 2.86 லட்சம் கிலோ மீட்டர் கேபிள்களை தேசிய பணமாக்கல் திட்டத்தின்படி, மத்திய அரசு தனியாருக்கு வழங்க உள்ளது. இந்த முடிவை கைவிட

ஈரோடு: மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து, பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களுக்கு சொந்தமான, 14,917 மொபைல் போன் டவர், கண்ணாடி இழை கேபிள்களில், 2.86 லட்சம் கிலோ மீட்டர் கேபிள்களை தேசிய பணமாக்கல் திட்டத்தின்படி, மத்திய அரசு தனியாருக்கு வழங்க உள்ளது. இந்த முடிவை கைவிட வலியுறுத்தி, அகில இந்திய பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்கத்தினர் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலு, ஒப்பந்த ஊழியர் சங்க மாநில நிர்வாகி சையது இத்ரிஸ், மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோபியில், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, கோபி கிளை தலைவர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X