பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் அவசர கூட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க, மாவட்ட மைய அவசர கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் குருராகவேந்திரன் தலைமை வகித்தார். கடந்த சட்டசபை தேர்தலின்போது பணி செய்த அனைத்து வருவாய் துறை அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியம், மதிப்பூதியம், செலவின தொகையை உடனடியாக வழங்க பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால் வரும், 13, 14

ஈரோடு: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க, மாவட்ட மைய அவசர கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் குருராகவேந்திரன் தலைமை வகித்தார். கடந்த சட்டசபை தேர்தலின்போது பணி செய்த அனைத்து வருவாய் துறை அலுவலர் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதியம், மதிப்பூதியம், செலவின தொகையை உடனடியாக வழங்க பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை. இதனால் வரும், 13, 14 மற்றும் 27, 28 தேதிகளில் நடக்கவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், கோரிக்கைகளை அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இன்று மதிய உணவு இடைவேளையின்போது, அனைத்து மாவட்ட தலைநகர், வட்ட தலைநகரிலும் வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகள், அலுவலர்களும் பங்கேற்க செய்ய வேண்டும். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பரிமளாதேவி தலைமை வகிப்பார், என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X