பொது செய்தி

தமிழ்நாடு

அரச்சலூர் அருகே எல்.பி.பி., வாய்க்காலில் உடைப்பு; தண்ணீர் குறைவாக சென்றதால் தப்பிய பயிர்கள்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னிமலை: அரச்சலூர் அருகே, எல்.பி.பி., பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.வாய்க்காலில் தண்ணீர் குறைவாக சென்றதால், அருகில் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கும். அரச்சலூரில் இருந்து சென்னிமலை வரும் எல்.பி.பி., மெயின் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. குறைந்த அளவு தண்ணீர் வருவதால் நீர் அழுத்தம் குறைவாக இருந்ததால் நீர் கசிவு இல்லாமால்

சென்னிமலை: அரச்சலூர் அருகே, எல்.பி.பி., பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.


வாய்க்காலில் தண்ணீர் குறைவாக சென்றதால், அருகில் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கரிலான பயிர்கள் நீரில் மூழ்கி இருக்கும். அரச்சலூரில் இருந்து சென்னிமலை வரும் எல்.பி.பி., மெயின் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. குறைந்த அளவு தண்ணீர் வருவதால் நீர் அழுத்தம் குறைவாக இருந்ததால் நீர் கசிவு இல்லாமால் விவசாய பயிர்கள் தப்பியது. மாவட்டத்தில் பெய்யும் தொடர் கனமழையால், எல்.பி.பி., வாய்கால் கரையில், பல இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது. நசியனூர் அருகே ஏற்பட்ட உடைப்பால், எல்.பி.பி., வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, குறைந்த அளவில் தற்போது தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் அரச்சலூரில் இருந்து சென்னிமலை செல்லும் பிரதான வாய்க்கால், மைல் 76/5ல் நேற்று உடைப்பு ஏற்பட்டது. குறைந்த நீரே செல்வதால், உடைப்பு பெரியதாகவில்லை. இதனால் தண்ணீர் கசிவும் ஏற்படவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை அடுக்கியும், பொக்லைன் இயந்திரம் கொண்டு உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.எல்.பி.பி., வாய்க்கால் கரையை பலப்படுத்த, மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X