பொது செய்தி

தமிழ்நாடு

சந்தேகங்களை எழுப்பும் 'ஓட்டை, உடைசல்' பின்னணி

Added : நவ 10, 2021
Share
Advertisement
பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில், 2.07 லட்சம் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கசிவு நீர் மூலம், 50 ஆயிரம் ஏக்கர் வரை பாசனம் பெறுகிறது. மண் கட்டமைப்பால் உருவான கீழ்பவானி வாய்க்காலை, பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் உடைப்பு, குழிகள் ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீர் மூலம், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில், 2.07 லட்சம் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கசிவு நீர் மூலம், 50 ஆயிரம் ஏக்கர் வரை பாசனம் பெறுகிறது. மண் கட்டமைப்பால் உருவான கீழ்பவானி வாய்க்காலை, பொதுப்பணித்துறையினர் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் உடைப்பு, குழிகள் ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. தற்போது, 720 கோடி ரூபாயில் கீழ்பவானி வாய்க்காலை கான்கிரீட் சுவர், குறிப்பிட்ட இடங்களில் தளம் அமைத்து, சீரமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு ஒரு பகுதி விவசாயிகள் எதிர்ப்பும், மற்றொரு பகுதியினர் ஆதரவும் தெரிவிக்கின்றனர். இதனால் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என சில பொதுப்பணித்துறை அதிகாரிகளும், சில விவசாய அமைப்பும் முனைப்பு காட்டுகின்றன. இதனால் எப்போதும் இல்லாத வகையில், இந்தாண்டு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்தது முதல், வாய்க்காலில் உடைப்பு, கரையில் உடைப்பு, பள்ளம், குழி விழுவது அதிகரித்துள்ளது. தங்கள் தரப்புக்கு வலு சேர்க்கும் வகையில், இந்த காட்சிகள் அரங்கேற்றப்படுகிறதோ? என சந்தேகம் எழுந்துள்ளது.


எல்லோரும் 'கப்சிப்': கடந்த ஆக., 15ல் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறந்ததும், 19ம் தேதியே சித்தோடு அருகே கண்ணவேலம்பாளையத்தில், கீழ்பவானி வாய்க்காலில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. தற்போது சில வாரமாக பல்வேறு இடங்களில், வாய்க்கால் உடைப்பு, ஓட்டை விழுவது அதிகரித்துள்ளது. கோபி தாசம்புதூர், நம்பியூர் அருகே சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சீரமைத்தனர். மொடக்குறிச்சி வெள்ளிவலசு, ஊதங்காட்டுபுதூர், திங்களூர் பகுதியில் லேசான உடைப்பும், சில இடங்களில் குழிகளும் ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. தற்போது அரச்சலூர் அருகே 'காட்சி' அரங்கேறியுள்ளதாக, உடைப்பு சம்பவங்களை கூர்ந்து கவனிக்கும், சில விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கீழ்பவானி வாய்க்காலில் இத்தனை உடைப்பு சம்பவம் நடந்தாலும், இதுவரை மாவட்ட நிர்வாகமோ, அரசியல்வாதிகளோ, விவசாய சங்கங்களோ யாரும் வாய் திறக்கவில்லை. இதுவும் பல்வேறு சந்தேகங்களை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X