பொது செய்தி

தமிழ்நாடு

பர்கூர் மலையில் மண் சரிவு சீரமைப்பு; 25 மணி நேரம் பாதித்த போக்குவரத்து

Added : நவ 10, 2021
Share
Advertisement
அந்தியூர்: பர்கூர் மலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்ட நிலையில், 25 மணி நேரத்துக்கு பின், மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.பர்கூர்மலையில் நெய்கரை என்ற இடத்தில், தொடர் மழையால் நேற்று முன்தினம் மதியம், 3:15 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது. மரங்களும், ராட்சத பாறைகளும் உருண்டு சாலையில் விழுந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து தடைபட்டது. தமிழகம் - கர்நாடகா

அந்தியூர்: பர்கூர் மலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்ட நிலையில், 25 மணி நேரத்துக்கு பின், மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கியது.


பர்கூர்மலையில் நெய்கரை என்ற இடத்தில், தொடர் மழையால் நேற்று முன்தினம் மதியம், 3:15 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது. மரங்களும், ராட்சத பாறைகளும் உருண்டு சாலையில் விழுந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து தடைபட்டது. தமிழகம் - கர்நாடகா மட்டுமின்றி, பர்கூர்மலை-அந்தியூர் இடையேயும் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மண் சரிவை சரி செய்யும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக களமிறங்கினர். இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் மற்றும் அதிகாரிகள், நேற்று சம்பவ இடத்துக்கு சென்றனர். பணியை பார்வையிட்டு துரிதமாக செய்து முடிக்க உத்தரவிட்டனர். நேற்று மாலை, 4:00 மணிக்கு சீரமைப்பு முடிந்து போக்குவரத்து சீரானது. மலைப்பாதையில் ஏறக்குறைய, 25 மணி நேரம் இருபக்கமும் காத்திருந்த வாகனங்களும், வாகன ஓட்டிகளும் பெருமூச்சு விட்டபடி செல்லத் தொடங்கின(ர்).

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X