பொது செய்தி

தமிழ்நாடு

சென்னிமலை, திண்டல் கோவில்களில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் இல்லாமல் அரங்கேறிய 'முருக வதம்'

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னிமலை: சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், சென்னிமலை, திண்டல்மலை, பச்சமலை முருகன் கோவில்களில், பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.சென்னிமலை முருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா, நான்கு ராஜவீதிகளில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பங்கேற்பர். நடப்பாண்டு சஷ்டி விழா கொரோனா அச்சுறுத்தலால்,

சென்னிமலை: சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், சென்னிமலை, திண்டல்மலை, பச்சமலை முருகன் கோவில்களில், பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.


சென்னிமலை முருகன் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா, நான்கு ராஜவீதிகளில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பங்கேற்பர். நடப்பாண்டு சஷ்டி விழா கொரோனா அச்சுறுத்தலால், பக்தர்களை அனுமதிக்காமல் நடந்தது. சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. சென்னிமலை கிழக்கு ராஜவீதி கைலாசநாதர் கோவில் உட்பிரகாரத்தில், மாலை, 6:30 மணிக்கு தொடங்கியது. தம்பதி சமேதராக முத்துக்குமார சுவாமி சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். சூரனை வதம் செய்யும் வேல், பூஜை செய்யப்பட்டு, சிவன் கோவில் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. அதை தொடர்ந்து யானை முகம் கொண்ட தாரகாசூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற பிறகு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலை, 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கும் பக்தர்கள் அனுமதி இல்லை. திருக்கல்யாணம் நிறைவு பெற்ற பின் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்களுக்கு, காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.


* திண்டல் மலை வேலாயுதசுவாமி கோவிலிலும், பக்தர்களை அனுமதிக்காமல், நேற்று மாலை சூரசம்ஹார விழா எளிமையாக நடந்தது. முன்னதாக காலை முதலே, தரிசனம் செய்ய பக்தர்கள், கோவிலில் குவிந்தனர். வள்ளி, தெய்வானையுடன் வேலாயுதசுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று காலை கோவிலில் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.


* கோபி பச்சமலை முருகன் கோவிலில், முருகபெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நேற்று காலை, 8:00 மணிக்கு நடந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலிலும், சூரசம்ஹாரம் நடந்தது.


* அந்தியூர் தேர்வீதி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹார விழாவை தொடர்ந்து, திரளான பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X