கள்ளுக்கடைமேட்டில் இன்று மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளுக்கடைமேட்டில் இன்று மூகாம்பிகை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Added : நவ 10, 2021
Share
ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேட்டில், மூகாம்பிகை அம்மன், சித்தி விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், ராமபக்த ஹனுமான் நூதன ஆலய அஷ்டபந்தன, மஹா கும்பாபிஷேக விழா, இன்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்வு நேற்று காலை தொடங்கியது. மாலையில் மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி, திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடந்தது. அதிகாலையில் இரண்டாம்

ஈரோடு: ஈரோடு, கள்ளுக்கடை மேட்டில், மூகாம்பிகை அம்மன், சித்தி விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், ராமபக்த ஹனுமான் நூதன ஆலய அஷ்டபந்தன, மஹா கும்பாபிஷேக விழா, இன்று காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்வு நேற்று காலை தொடங்கியது. மாலையில் மஹா சங்கல்பம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி, திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடந்தது. அதிகாலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜை தொடங்கி, யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடக்கிறது. காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் முத்துசாமி, எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா, மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், மாநில கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி தலைமை வகிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X