மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்ய எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்ய எதிர்ப்பு

Added : நவ 10, 2021
Share
ஈரோடு: தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: மரங்களில் ஆணி அடித்து, விளம்பர பலகைகள், தகர பதாகைகளை வைப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக மாநகரில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பிரதான சாலைகளில் இச்செயல் அதிகரித்துள்ளது. மரத்தை விளம்பரம் செய்யும் பொருளாக மாற்றி விட்டனர்.

ஈரோடு: தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: மரங்களில் ஆணி அடித்து, விளம்பர பலகைகள், தகர பதாகைகளை வைப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக மாநகரில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பிரதான சாலைகளில் இச்செயல் அதிகரித்துள்ளது. மரத்தை விளம்பரம் செய்யும் பொருளாக மாற்றி விட்டனர். இதனால் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறு. இச்செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X