பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று(நவ.,10) சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை(நவ.,11) சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த
சென்னை, chennai, rain, redalert,

சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று(நவ.,10) சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. நாளை(நவ.,11) சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கை: தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரி கடற்கரையை கைாரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக
வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ., வேகத்தில் 11 ம் தேதி காலை முதல் வீசக்கூடும்.


latest tamil news





இன்று(நவ.,10)


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களல் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,

கோவை, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய க மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.



நாளை (நவ.,11)



சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,

காஞ்சிபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும்,

செங்கல்பட்டு, புதுச்சேரி, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news





சென்னையை பொறுத்தவரை


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சில பகுதிகளில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணிநேரத்திற்கு நகரின் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யலாம்.


மழை அளவு



கடந்த 24 மணி நேரத்தில், 5 இடங்களில் அதி கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
நாகப்பட்டினம், திருப்பூண்டி( நாகை)யில் தலா 31 செ.மீ., காரைக்காலில் 29 செ.மீ., வேதாண்யம்(நாகப்பட்டினம்) 25 செ.மீ., தலைஞர்(நாகை)-24 செ.மீ., திருத்துறைப்பூண்டி( திருவாரூர்) 22 செ.மீ., பேராவூரணி (தஞ்சாவூர்) - 20 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை



நவ.,10,11:
தென் மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும் இடை இடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
10-நவ-202122:05:33 IST Report Abuse
M  Ramachandran மேற்கு மண்டலங்களுக்கு பாவ சுமை குறைவு. மற்ற மண்டலங்கள் அதை ஈடு செய்யும். இலங்கை தமிழரை காவு வாங்க வாய்த்த பெருமையை உடையவர்களுக்கு அந்த பாவத்தின் சம்பளம் விரைவில் கிடைக்க போகிறது.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
10-நவ-202118:55:53 IST Report Abuse
Vittalanand இவ்வளவு மழை பெய்தாலும் வரும் ஏப்ரல், மே ஜூன் மாதங்களில் நீர் வற்றி தவிக்க போகிறோம்.
Rate this:
Cancel
சிவா - Aruvankadu,இந்தியா
10-நவ-202115:25:51 IST Report Abuse
சிவா தீயணைப்பு துறை அலுவலகம் மூழ்கி கிடக்கும் போது மற்ற யாரை இவர்கள் காப்பாற்றி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X