வெள்ளப்பெருக்கால் இறந்த முதியவர்; பாலம் கட்டக்கோரி ஆற்றில் இறங்கிய மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளப்பெருக்கால் இறந்த முதியவர்; பாலம் கட்டக்கோரி ஆற்றில் இறங்கிய மக்கள்

Added : நவ 10, 2021
Share
கெங்கவல்லி: வெள்ளப்பெருக்கால் அடித்துச்செல்லப்பட்டு முதியவர் இறந்ததால், சுவேத நதியில் பாலம் கட்டித்தரக்கோரி, ஆற்றில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி, ஆணையாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 75. இவர், கடந்த, 7ல், சுவேத நதியை கடக்க முயன்றபோது வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை, மறுகரையில் உள்ள மயானத்தில்

கெங்கவல்லி: வெள்ளப்பெருக்கால் அடித்துச்செல்லப்பட்டு முதியவர் இறந்ததால், சுவேத நதியில் பாலம் கட்டித்தரக்கோரி, ஆற்றில் இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


சேலம் மாவட்டம், கெங்கவல்லி, ஆணையாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 75. இவர், கடந்த, 7ல், சுவேத நதியை கடக்க முயன்றபோது வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை, மறுகரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய பாதை இல்லாததால், ஆற்றின் கரையிலேயே, நேற்று முன்தினம் அடக்கம் செய்தனர். நேற்று, அப்பகுதி மக்கள், ஆற்றில் இறங்கி பாலம் கட்டித்தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுக்கு பின், ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, அவர்கள், தாசில்தார் முருகையனிடம் அளித்த மனு: ஆணையாம்பட்டியில், 2,500 பேர் வசிக்கிறோம். ஆற்றின் மறுகரையில், 500 குடும்பங்கள் வசிக்கின்றன. சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மக்கள், மாணவ, மாணவியர் ஆற்றை கடக்க முடியாது. இதனால், கடந்த, 7ல் முதியவர் உயிர் பறிபோனது. மறுகரையில் மயானம் உள்ளதால், இறந்தவர் உடலை ஆற்று வழியாகவே கொண்டு செல்ல வேண்டும். இரு ஆண்டுக்கு முன் பாலம் கட்ட, பணி மேற்கொண்டனர். ஆனால் கட்டப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் பயனில்லை. ஆற்றை கடக்க, புதிதாக பாலம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X