பொது செய்தி

தமிழ்நாடு

தம்மம்பட்டியில் 40 மி.மீ., மழை பதிவு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்கிறது. மித, கனமழை என, இரவு, பகல் மாறிமாறி வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் தம்மம்பட்டியில், 40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. வீரகனூர், 12, பெத்தநாயக்கன்பாளையம், 11, ஆத்தூர், 9.8, ஆணைமடுவு, 9, கெங்கவல்லி, 8.5, கரியகோவில், 8, காடையாம்பட்டி, 5, மேட்டூர், 4.8, ஏற்காடு, 4.4, இடைப்பாடி, 4, சங்ககிரி, 3.1, சேலம், 1.4, ஓமலூரில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்கிறது. மித, கனமழை என, இரவு, பகல் மாறிமாறி வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் தம்மம்பட்டியில், 40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. வீரகனூர், 12, பெத்தநாயக்கன்பாளையம், 11, ஆத்தூர், 9.8, ஆணைமடுவு, 9, கெங்கவல்லி, 8.5, கரியகோவில், 8, காடையாம்பட்டி, 5, மேட்டூர், 4.8, ஏற்காடு, 4.4, இடைப்பாடி, 4, சங்ககிரி, 3.1, சேலம், 1.4, ஓமலூரில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் நேற்று வரை, சேலத்தில், 264.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இயல்பான மழையளவு, 225.9 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 17 சதவீத மழை அதிகம் பெய்துள்ளது. வரும், 13 வரை மழை நீடிக்கும் என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஏரி நிரம்பியதால் வழிபாடு: கல்வராயன்மலையில் தொடர் மழை பெய்து வருவதால், வசிஷ்ட நதி, கல்லாற்றில் வரும் தண்ணீர், ஆத்தூர், அய்யனார் கோவில் ஏரிக்கு வருகிறது. நேற்று முன்தினம், அந்த ஏரி நிரம்பி, கல்லாநத்தம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. நேற்று, பாசன விவசாயிகள் சார்பில், தண்ணீர் வழிந்தோடும் பகுதியில், பூசணிக்காய் வெட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், ஏரியில் பூக்கள் தூவி வழிபட்டனர்.

சுவர், மேற்கூரை சேதம்: ஆத்தூர் டவுன் பகுதியை சேர்ந்த, செல்வமேரி, சலுப்பாயி, செல்வி ஆகியோரின் நான்கு ஓட்டு வில்லை வீட்டின் மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

மேகமூட்டத்துடன் பனி: சேலத்தில் மழையால் சூரிய வெளிச்சம் இன்றி கருமேகம் சூழ்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல், மழை நின்று நேற்று காலை முதல், புகைபோல் பனிமூட்டம் பொழிந்தது. இதனால், நெடுஞ்சாலைகளில், 5 அடி தூரத்தில் உள்ளவை கூட தெரியாத அளவு பனி படர்ந்திருந்தது. கொண்டலாம்பட்டி அருகே, பட்டர்பிளை மேம்பாலத்தில், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, அனைத்து கண்ணாடிகளையும் ஏற்றிக்கொண்டு, குளிரில் நடுங்கியபடி வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X