பொது செய்தி

தமிழ்நாடு

சூரசம்ஹாரம்: திரளான பக்தர்கள் வழிபாடு

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி, நேற்று, சிறப்பு பூஜை, சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குறிப்பாக, உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில், கணபதி ?ஹாமத்துடன் தொடங்கிய விழாவில், முருகன் சிறப்பு அலங்காரத்தில், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி, நேற்று, சிறப்பு பூஜை, சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குறிப்பாக, உடையாப்பட்டி கந்தாஸ்ரமத்தில், கணபதி ?ஹாமத்துடன் தொடங்கிய விழாவில், முருகன் சிறப்பு அலங்காரத்தில், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், பேர்லண்ட்ஸ் முருகன் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன் முருகன் முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மாபேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், 1,008 லிட்டர் பால் அபி?ஷகம் நடந்தது. அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், வள்ளி, தெய்வானையுடன் தங்க கவச சாத்துபடியில் சுவாமி அருள் பாலித்தார். கந்தசஷ்டி பாராயணத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஊத்துமலை முருகன், செவ்வாய்ப்பேட்டை சித்திரைச்சாவடி முருகன், ஏற்காடு ஆறுபடை முருகன், ஜாகீர்அம்மாபாளையம், காவடி பழநியாண்டவர் ஆசிரமம் உள்பட, மாவட்டம் முழுதும் பல்வேறு முருகன் கோவில்களில், திரளான பக்தர்கள், முருகனை வழிபட்டனர்.


'முருகனுக்கு அரோகரா': காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நேற்று காலை முதல், கந்தசஷ்டி கவசம், 36 முறை பாராயணம் பக்தர்களால் செய்யப்பட்டது. மாலை, கையில் சக்திவேல் ஏந்தி, கந்தசாமி போர்க்கோலத்தில் எழுந்தருள, எதிரே, அசுரர்கள் போர் செய்ய காத்திருந்தனர். சூரசம்ஹாரத்தை காண, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது, 'அரோகரா, வெற்றிவேல், வீரவேல்' கோஷம் முழங்க, கந்தசாமி கோவிலை சுற்றிவந்து, ஒவ்வொரு திசையில் யானை முக சூரன், சிங்க முக சூரன், ஆடு முக சூரன், இறுதியாக சூரபத்மனை, சக்திவேலால் அழித்தார். இன்று மாலை தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் சூரசம்ஹார விழா நிறைவடையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X