100 ஏரிகளுக்கு உபரி நீர் பாசன திட்டம்: காளிப்பட்டியில் நீர் நிரப்ப வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 ஏரிகளுக்கு உபரி நீர் பாசன திட்டம்: காளிப்பட்டியில் நீர் நிரப்ப வலியுறுத்தல்

Added : நவ 10, 2021
Share
மேட்டூர்: மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தின், 100 வறண்ட ஏரிகளில் நிரப்பி பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தை, 565 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. அதற்கான பணி, 2019ல் துவங்கியது. பணி முழுமையாக முடியாத நிலையில், உபரி நீர் நிரப்பும் திட்டத்தை முன்னாள் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். கட்டுமானம், குழாய் அமைப்பு, ஏரி தூர்வாரும் பணிகள் நிறைவடையவில்லை.

மேட்டூர்: மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்தின், 100 வறண்ட ஏரிகளில் நிரப்பி பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டத்தை, 565 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள அரசு முடிவு செய்தது. அதற்கான பணி, 2019ல் துவங்கியது. பணி முழுமையாக முடியாத நிலையில், உபரி நீர் நிரப்பும் திட்டத்தை முன்னாள் முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். கட்டுமானம், குழாய் அமைப்பு, ஏரி தூர்வாரும் பணிகள் நிறைவடையவில்லை. இந்நிலையில், மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் ஏரிகளில் நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தினர். நேற்று திப்பம்பட்டியில் நடக்கும், உபரி திட்ட கட்டுமான பணியை மேட்டூர் பா.ம.க.,-எம்.எல்.ஏ., சதாசிவம் ஆய்வு செய்த பின் கூறியதாவது: காளிப்பட்டி ஏரி தூர்வாரி தயார் நிலையில் உள்ளது. முதல்கட்டமாக வரும், 12ல் உபரி நீரை எம்.காளிப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும் என, அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். நிரப்பாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X