பொது செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி: மத்திய மாவட்ட தி.மு.க., ஆலோசனை

Added : நவ 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகித்தார். அதில், மத்திய மாவட்ட செயலர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் சிறப்பு முகாமை, கட்சியினர் முழுமையாக பயன்படுத்தி, தங்கள் பகுதி, தகுதியான வாக்காளர்களை, பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர் பெயரை

சேலம்: சேலம் தி.மு.க., அலுவலகத்தில், மத்திய மாவட்ட அவசர செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகித்தார். அதில், மத்திய மாவட்ட செயலர், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசியதாவது: வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் சிறப்பு முகாமை, கட்சியினர் முழுமையாக பயன்படுத்தி, தங்கள் பகுதி, தகுதியான வாக்காளர்களை, பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர் பெயரை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சேலம் மாநகராட்சி, பேரூராட்சிகளில், 100 சதவீதம் வெற்றி பெற உழைக்க வேண்டும். தேர்தல் ஆயத்தப்பணி மேற்கொள்ள, வரும், 14ல் கட்சி முதன்மை செயலர், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கன்னங்குறிச்சி புது ஏரியை, எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X